நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் இன்று (03) மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கை மதுவரித் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரான மேலதிக மதுவரி ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளார்.
உலகளாவிய ரீதியில் இன்றைய தினம் சர்வதேச மது ஒழிப்பு தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இதனை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் இன்று (03) மூடப்படும் என அவர் தெரிவித்தார்