நீண்ட நெடிய போராத்திற்குப் பிறகு, எருமையின் வயிற்றில் இருந்து ரூபாய் 1.5 லட்சம் மதிப்பிலான தாலியை கால்நடை மருத்துவர்கள் பத்திரமாக மீட்டெடுத்துள்ள சம்பவம் பேசுபொருளாகி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் வாஷிம் மாவட்டத்தில் ராம்ஹரி என்பவரின் மனைவி குளிக்கச் செல்லும் முன்பு தாலி சங்கிலியை கழற்றி, உணவு தட்டு ஒன்றில் மறைத்து வைத்துள்ளார்.

அதனை மறந்த அவர், எருமைமாட்டிற்கு அதே தட்டில் உணவு வைத்துள்ளார். அப்போது உணவோடு உணவாக ஒன்றரை லட்ச ரூபாய் தாலி சங்கிலியை சைட் டிஷ்சாக விழுங்கியது இந்த எருமைமாடு. கிட்டத்தட்ட 3 பவுன் என சொல்லப்படுகிறது

சிறிது நேரத்திற்கு பிறகே தாலி காணாமல் போனதை உணர்ந்த ராம்ஹரியின் மனைவி வீடு முழுவதும் தேடியுள்ளார்.

அதன் பிறகே, மாட்டிற்கு உணவு வைத்த தட்டில் தாலியை வைத்திருந்தது அவருக்கு நினைவுக்கு வந்தது. தகவல் அறிந்து விரைந்த கால்நடை மருத்துவர், எருமையின் வயிற்றில் தாலி இருப்பதை உறுதி செய்தார்.

இதனை தொடர்ந்து சுமார் 2 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு எருமையின் வயிற்றில் இருந்து தாலி சங்கிலி மீட்கப்பட்டது.

ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான தாலியை விழுங்கிய குற்றத்திற்காக எருமையின் வயிற்றில் 63 தையல்கள் போடப்பட்டுள்ளன.

Share.
Leave A Reply