sசென்னை: நடிகை விசித்ரா தன்னுடைய சினிமா வாழ்க்கை மற்றும் தன்னை பற்றி வந்த வதந்திகள் குறித்து முதல் முறையாக பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

நடிகர் கவுண்டமணியோடு நடிக்கும் போது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்தும் கவுண்டமணிக்கும் தனக்கும் ஏற்பட்ட சண்டை குறித்தும் பேசி இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் கதாநாயகியாக அறிமுகமாகி பிறகு கிளாமர் ரோலில் நான் எப்படி எதனால் நடித்தேன் என்பது பற்றியும் அந்த வீடியோவில் நடிகை விசித்ரா விளக்கம் கொடுத்திருக்கிறார்.

அதை பற்றி விரிவாக பார்க்கலாம். Stay நடிகை விசித்ரா ஆரம்ப காலகட்டத்தில் கவர்ச்சியான கேரக்டர்களும், காமெடி கேரக்டரிலும் நடித்து பிரபலம் அடைந்திருந்தார்.

அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளிலும் பல திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.

இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்த விசித்திரா இப்போது மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இவர் மூன்றாவது இடத்தை பிடித்திருந்தார்.

அதுபோல ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் எனும் சீரியலிலும் முக்கியமான கேரக்டரில் விசித்திரா நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் பிக் பாஸ் தமிழ் சீசன் 7இல் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வார் என்றும் ஒரு பேச்சு அடிபட்டு கொண்டிருக்கிறது.

ஆனால் அது உண்மையா? இல்லையா? என்று உறுதியான தகவல்கள் இன்னும் தெரியவில்லை.

இந்த நிலையில் விசித்திரா தான் சினிமாவில் நடிக்கும்போது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து பேசி இருக்கிறார்.

அதில் நான் நடிகர் கவுண்டமணியோடு சேர்ந்து பல திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். எனக்கு முன்பு ஷாமிலி அவரோடு அதிகமான திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

அந்த நிலையில் நான் அவரோடு நடிக்கும் போது நல்லாத்தான் போய்க்கொண்டிருந்தது. ஒருமுறை பெரிய குடும்பம் திரைப்படத்தில் எனக்கு நடிக்க கே எஸ் ரவிக்குமார் வாய்ப்பு கொடுத்திருந்தார்.

நானும் படத்தின் பூஜையில் கலந்து கொண்டிருந்தேன். அப்போது கே எஸ் ரவிக்குமார் என் முன்பு கையை பிசைந்து கொண்டு இருக்கிறார்.

ஏதோ சொல்ல வருகிறார் பிறகு யோசித்து எப்படி சொல்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்.

பிறகு என்னிடம் அவரே உனக்கும் கவுண்டமணி சாருக்கும் என்ன பிரச்சனை என்று கேட்டார். நான் அப்படி பிரச்சனை ஒன்றும் இல்லையே, என்ன ஆச்சு ஏன் இப்படி கேக்குறீங்க என்றேன்.

அதற்கு அப்போ வா என்று என்னை கூட்டிக்கொண்டு போனார். நானும் அவரோடு போனேன் அங்கே கவுண்டமணி சார் உக்காந்து இருந்தார்.

அப்போது கவுண்டமணி சாருக்கு ஒரு வணக்கம் சொல்லு என்று சொன்னார். நான் அதான் வரும்போது ஏற்கனவே வணக்கம் சொல்லிவிட்டேனே என்று சொன்னேன்.

அது இருக்கட்டும் இப்போது சொல்லு என்று கே எஸ் ரவிக்குமார் சொன்னதும் நானும் சரி என்று சார் வணக்கம் என்று சொன்னேன்.

கவுண்டமணி சாரும் எனக்கு வணக்கம் சொன்னார். அவ்வளவுதான் பிராப்ளம் சால்வ்.

ஆனால் ஏற்கனவே எப்போதோ நான் சூட்டிங் ஸ்பாட்டில் அவர் இருக்கும் போது அவருக்கு வணக்கம் சொல்லவில்லையாம்.

அது எனக்கு எப்போது என்று கூட தெரியவில்லை. ஆனால் அதை மனதில் வைத்துக்கொண்டு அந்த விசித்திரா பொண்ணு ரொம்ப திமிரு புடிச்ச பொண்ணு.

நான் அந்த பொண்ணோட நடிக்க மாட்டேன் என்று கே எஸ் ரவிக்குமாரிடம் நடிகர் வடிவேலு கவுண்டமணி பிரச்சனை செய்திருக்கிறார்.

ஆனால் நான் பேசியதும் பிரச்சனை முடிந்தது அவ்வளவுதான். கவுண்டமணி சார் இப்படிப்பட்ட கேரக்டர் தான்.

அதே நேரத்தில் அவருக்கும் எனக்கும் தொடர்பு என்றெல்லாம் அந்த நேரத்தில் வதந்திகள் பரவியது. அதுவெல்லாம் சுத்த பொய்தான்.

எப்போதுமே சினிமா துறையில் இப்படித்தான் வதந்திகள் வருவது வழக்கம் தான். கே எஸ் ரவிக்குமார் சார் மூன்று நான்கு படங்கள் எனக்கு வாய்ப்பு கொடுத்தால் உடனே அவங்க ரெண்டு பேருக்கும் ஏதோ கனெக்சன்.

அதிகாலை ஜாக்கிங்கில் வந்த காதல்.. கிளாமர் நடிகைனு தெரிந்ததும் கணவர் சொன்னது.. விசித்ரா எமோஷனல் அதிகாலை ஜாக்கிங்கில் வந்த காதல்.. கிளாமர் நடிகைனு தெரிந்ததும் கணவர் சொன்னது.. விசித்ரா எமோஷனல் அதனால்தான் தொடர்ச்சியா வாய்ப்பு கொடுக்கிறார் என்று வதந்தி பரப்பு வாங்க இப்படித்தான்.

பல பேரோடு என்னை பற்றி வதந்தி பரப்பினாங்க. அதை எல்லாம் நான் கண்டு கொள்வது கிடையாது.

ஆனால் ஒரு கட்டத்துக்கு மேலே போனால் இரண்டில் ஒன்று பார்த்து விடலாம் என்று நான் இறங்கி விடுவேன் என்றும் அந்த பேட்டியில் நடிகை விசித்திரா பேசியிருக்கிறார்.

Share.
Leave A Reply