மட்டு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 9 வயது சிறுமியை பாலியல் சேஷ்டை புரிந்த 83 வயதுடைய ஒருவரை புதன்கிழமை (04) கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்திலுள்ள 9 வயது சிறுமி ஒருவர் மீது 83 வயதுடடய முதியவர் பாலியல் சேஷ்டை புரிந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நடந்ததை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து சிறுமியின் பெற்றோர் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

முறைப்பாட்டையடுத்து பொலிஸாரால் குறித்த முதியவரை கைது செய்துள்ளதுடன் சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

Share.
Leave A Reply