கொழும்பு – கொள்ளுப்பிட்டி, டுப்ளிகேஷன் வீதியின் லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் மீது இன்று காலை மரம் முறிந்து வீழ்ந்ததில் ஐவர் உயிரிந்துள்ளதுடன், நால்வர் காயமடைந்துள்ளனர்.

மத்துகம நோக்கி பயணித்த இந்த பஸ் கொழும்பு கோட்டையிலிருந்து பயணத்தை ஆரம்பித்திருந்தது.

இன்று காலை 6.05 மணியளவில் கொள்ளுப்பிட்டி – டுப்ளிகேஷன் வீதியின் லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் பஸ் மீது மரமொன்று முறிந்து விழும் காட்சி அங்கிருந்த CCTV-இல் பதிவாகியிருந்தது.

பஸ் மீதி மரம் முறிந்து வீழ்ந்த போது 35 பயணிகள் அதில் இருந்துள்ளனர்.

இந்த சம்பவத்தையடுத்து, டுப்ளிகேஷன் வீதியினூடான போக்குவரத்து முழுமையாக ஸ்தம்பிதமடைந்தது.

பஸ்ஸூக்குள் சிக்குண்டிருந்தவர்களை மீட்பதற்கு பொலிஸாரும் தீயணைப்பு பிரிவினரும் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டனர்.

விபத்தில் ஐவர் உயிரிழந்ததுடன், காயமடைந்த 7 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

Share.
Leave A Reply