சென்னை: கேரவனை பார்க்க விரும்பிய சிறுவர்களின் ஆசையை நிறைவேற்றிய சூரி, அவர்களை கேரவனுக்குள் அழைத்து சென்று காண்பித்தார்.
நடிகர் சூரியின் இந்த செயலை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
சினிமா பிரபலங்கள் சூட்டிங்கின் போது ஓய்வு எடுக்கவும் மேக்கப் செய்து கொள்ளவும் கேரவனை பயன்படுத்துகின்றனர்.
முன்னணி நட்சத்திரங்கள் சூட்டிங்கில் பங்கேற்கிறார்கள் என்றால் சூட்டிங் ஸ்பாட்டிற்கு அருகிலேயே சகல வசதிகளுடன் கூடிய ஒரு கேரவன் நிறுத்தப்பட்டு இருப்பதை பல இடங்களில் பார்த்து இருக்கலாம்.
தற்போது அரசியல் தலைவர்களும் தங்களது பிரசாரங்கள், நடைபயணம் போன்றவைகளின் போது கேரவனை பயன்படுத்த தொடங்கியுள்ளார்கள்.
தேவர் தங்க கவசம்.. திண்டுக்கல் சீனிவாசன் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு.. ஒபிஎஸ் பதிலளிக்க கோர்ட் உத்தரவு தேவர் தங்க கவசம்.. திண்டுக்கல் சீனிவாசன் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு.. ஒபிஎஸ் பதிலளிக்க கோர்ட் உத்தரவு
கேரவனை பொறுத்தவரை மினி ஹோம் என்று சொல்லும் வகையில் சகல வசதிகளும் அதில் இருக்கும்.
முழுவதும் ஏசி வசதியுடன் ஓய்வு எடுக்கவும் விருந்தினர்கள் வந்தால் அவர்களை சந்தித்து பேசுவதற்கான அளவுக்கு வசதிகளும் கேரவனில் இடம் பெற்று இருக்கும்.
பேருந்தையே இதுபோன்று முற்றிலும் மாற்றி வடிவமைத்து நினைத்த இடத்திற்கு கொண்டு செல்கிறார்கள்.
கேரவனை வெளியில் இருந்து பார்க்கும் சினிமா ரசிகர்கள் பலருக்கும் கேரவனிற்குள் இருக்கும் வசதிகளை நேரில் பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும்.
அந்த வகையில்,சினிமா சூட்டிங் ஸ்பாட்டின் போது நடிகர் சூரியின் கேரவனை உள்ளே சென்று பார்க்க அங்கு வந்த சிறுவர்கள் ஆசைப்பட்டுள்ளனர்.
சூரியும் உடனடியாக சிறுவர்களையும் கேரவனுக்குள் அனுமதித்து அவர்களின் விருப்பத்தை நிறைவெற்றினார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. கேரவனின் வாசலில் நிற்கும் சூரியிடம் வெளியே நின்ற சிறுவர், சிறுமியர்கள், உள்ளே சென்று பார்க்க வேண்டும் என்று மழலை குரலில் கேட்கின்றனர்.
சூரியும் உடனே.. அது மேக் அப் போடும் ரூம்.. என்று சொல்கிறார். சிறுவர்கள் விடாமல் உள்ளே சென்று பார்க்கனும்… ஒரே ஒரு முறை அனுமதியுங்க… என்று கேட்கவே… சத்தம் போடாமல் வந்து பாருங்கள் என்று அனுமதிக்கிறார்.
உடனே அங்கு நின்ற சிறுவர்கள் மகிழ்ச்சியோடு உள்ளே சென்று பார்த்து விட்டு வருகின்றனர். அதோடு சிறுவர்களை அழைத்து சென்று கேரவனை காண்பிக்கவும் செய்கிறார்.
சிறுவர்கள் அனைவரும் கேரவனை பார்த்து விட்டு மகிழ்ச்சியுடன் ஒவ்வொருவராய் வெளியே வந்தனர்.
பின்னர் வெளியே வந்த சிறுவர்களிடம் அனைவரும் நன்றாக படிக்க வேண்டும் என்று அட்வைஸ் செய்து சூரி அனுப்பினார்.
சூரியின் இந்த செயல் சமூக வலைத்தளங்களில் பலராலும் பாராட்டை பெற்று வருகிறது. நெட்டிசன்கள் சூரியின் செயலை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.