நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் காயமடைந்துள்ளதுடன் 13,352 குடும்பங்களைச் சேர்ந்த 54,440 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தின் 17 பிரதேச செயலகப் பிரிவுகளில் 273 குடும்பங்களைச் சேர்ந்த 1,041 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கேகாலை மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளில் 278 குடும்பங்களைச் சேர்ந்த 1,058 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு மாவட்டத்தின் மூன்று உள்ளூராட்சிச் செயலகப் பிரிவுகளில் 70 குடும்பங்களைச் சேர்ந்த 293 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அந்த மாவட்டத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 17 பேர் காயமடைந்துள்ளனர்.

களுத்துறை மாவட்டத்தின் 13 பிரதேச செயலகப் பிரிவுகளில் 865 குடும்பங்களில் 3,203 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் கம்பஹா மாவட்டத்தில் 12 பிரதேச செயலகப் பிரிவுகளில் 134 குடும்பங்களில் 593 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாத்தறை மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளில் 2,114 குடும்பங்களைச் சேர்ந்த 8,597 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.

காலி மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளில் ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 25 பேரும், புத்தளம் மாவட்டத்தின் இரண்டு பிரலே பிரிவுகளில் 52 குடும்பங்களைச் சேர்ந்த 193 பேரும், குருநாகல் மாவட்டத்தில் 54 குடும்பங்களைச் சேர்ந்த 204 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 724 வீடுகளும் கடுமையாக சேதமடைந்துள்ளன.

Share.
Leave A Reply