• “அதிகபட்சமாக தடகள போட்டிகளில் 29 பதக்கம், துப்பாக்கி சுடுதலில் 22 பதக்கங்களை இந்தியா வென்றது.

• பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் சாத்விக்- சிராக் ஜோடி தங்கம் வென்றது. “

“19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வருகிறது.

கடந்த மாதம் 23-ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா சார்பில் 661 பேர் கலந்து கொண்டனர். 35 விளையாட்டுகளில் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

நேற்றைய 14-வது நாள் போட்டி முடிவில் இந்தியா 22 தங்கம், 34 வெள்ளி, 39 வெண்கலம் ஆக மொத்தம் 95 பதக்கங்களைப் பெற்று பதக்க பட்டியலில் தொடர்ந்து 4-வது இடத்தில் இருந்தது.

நேற்று ஒரே நாளில் 9 பதக்கங்களைப் பெற்றது.ஆசிய விளையாட்டு போட்டியின் 15-வது நாளான இன்று காலை இந்தியாவுக்கு மேலும் 5 பதக்கம் கிடைத்தது.

இதன்மூலம் 100 பதக்கங்களைக் குவித்து புதிய வரலாற்று சாதனை படைத்தது.3 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் ஆக மொத்தம் 5 பதக்கம் கிடைத்தது.

இதை தொடர்ந்து மேலும் இன்றைய ஆட்ட முடிவில் மேலும் 7 பதக்கள் கிடைத்தன. அதன்படி, இன்றைய நாளில் மட்டும் 6 தங்கம், 4 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் என 12 பதக்கங்களை இந்தியா வென்றது.

இந்நிலையில், இந்தியாவிற்கான ஆட்டங்கள் முடிவடைந்தன. ஆசிய விளையாட்டு போட்டிகளின் முடிவில் 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கல பதக்கம் என மொத்தம் 107 பதக்கங்களை வென்று போட்டியை இந்தியா நிறைவு செய்துள்ளது.

இதில், அதிகபட்சமாக தடகள போட்டிகளில் 29 பதக்கம், துப்பாக்கி சுடுதலில் 22 பதக்கங்களை இந்தியா வென்றது.

மகளிர், ஆடவர் செஸ் அணிகள் பிரிவில் வெள்ளி பதக்கம். வில்வித்தையில் ஓஜஸ் மற்றும் ஜோதி தங்கம் வென்றனர்.

பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் சாத்விக்- சிராக் ஜோடி தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.19வது ஆசிய விளையாட்டு போட்டியின் கடைசி நாளான நாளை பிற நாடுகள் விளையாடும் ஒரு சில போட்டிகள் உள்ளன. அதன்பிறகு, ஆசிய விளையாட்டு போட்டியின் நிறைவு விழா நடைபெறும்.”,

Share.
Leave A Reply