என்மீது விழுந்த உடல்களே என்னை காப்பாற்றின என ஹமாசின் தாக்குதலில் சிக்குண்டு உயிர்தப்பிய பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.

ஹமாசின் தாக்குதலில் சிக்குண்ட பெண்ணொருவர் தனது 24 வயது மகன் எலியன் கடத்தப்பட்டுள்ளார் என அல்ஜசீராவிற்கு தெரிவித்துள்ளார்.

அந்த தருணத்திலிருந்து உண்பதும் உறங்குவதும்; கடினமாக உள்ளது அவர் எங்கிருக்கின்றார் என்ன நடந்திருக்கும் என்ற சிந்தனையிலேயே நான் எப்போதும் உள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் தாககுதலை ஆரம்பித்தவேளை இஸ்ரேலிய எல்லைக்கு அருகில் இடம்பெற்றுக்கொண்டிருந்த இசைநிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலரில் அவரது மகனும் ஒருவர் .

சம்பவம் இடம்பெற்ற பகுதியில் 270 பேரின் உடல்களை மீட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

உடல்கள் என்மீது விழுந்தன உடல்களே என்னை காப்பாற்றின துப்பாக்கிபிரயோகத்திலிருந்து அவை என்னை காப்பாற்றின என அந்த பெண் தெரிவித்துள்ளார்.

நானும் மகனும் ஒருவரையொருவர் இருக்கமாக பிடித்துக்கொண்டு நின்றோம் தீடிரென ஒருவர் மகனை இழுத்துச்சென்றார் நான் அவனை இழந்தேன் என அபுட் என்ற பெண்மணி கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply