கடந்த 24 மணி நேரத்திற்குள் வவுனியாவில் கட்டாக்காலி மாடுகளினால் ஏற்பட்ட இரு வேறு விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 7பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இரு விபத்துமே கட்டாக்காலி மாடுகளினால் ஏற்பட்டுள்ளது.
வவுனியா பம்பைமடு இன்று (10) வவுனியா குருக்கல் புதுக்குளம் பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று பம்பைமடு பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த வேளையில் மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குருக்கள புதுக்குளத்தை சேர்ந்த 44 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயாரான விஜயரத்தினம் ஜெயந்தினி என்பவர் உயிரிழந்துள்ளார்.
இதன் போது இவருடன் பயணித்த இவரது மகனான 22வயதுடைய சிஙறோஜன் என்பவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொதுவைத்தியசாலையில் சிகிச் சை பெற்று வருகின்றார்.
அதேவேளை வவுனியா வெளிக்குளம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் விசேட அதிரடிப்படையினர் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 6பேர் படுகாயமடைந்து வைத்தியசாயைில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவற்றுள்இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.இதேவேளை கடந்த 24 மணி நேரத்திற்குள் வவுனியாவில் ஏற்பட்ட இரு வேறு விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் இரு விபத்துமே கட்டாக்காலி மாடுகளினால் ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.