ரியாத்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் சவுதி முடி இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் நேற்று இரவு பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல் குறித்து விவாதித்தனர்.

இரு தலைவர்களுக்கிடையிலான இந்த முதல் தொலைபேசி உரையாடல் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.

சுமார் 45 நிமிடங்கள் இவர்கள் ஆலோசனை செய்தது இஸ்ரேல், அமெரிக்கா போன்ற மேற்கு உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.

பரம வைரிகளான ஈரான் – சவுதி அரேபியா இரண்டு நாடுகளும் தங்கள் உறவை புதுப்பிப்பதாக சமீபத்தில்தான் அறிவித்தது.

சீனா மேற்கொண்ட ப்ரோக்கர் பேச்சுவார்த்தை காரணமாக இரண்டு நாடுகளும் கைகோர்க்க முடிவு செய்துள்ளன.

பல்வேறு விஷயங்களில் இரண்டு நாடுகளும் தீவிரமாக மோதி வந்தன. இரண்டு நாடுகளுக்கும் இடையில் வரலாற்று ரீதியாக மோதல்கள் நிலவி வருகின்றன.

ஈரான் என்பது ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் நாடு ஆகும். சவுதி அரேபியா என்பது சன்னி பிரிவு முஸ்லீம் அதிகம் இருக்கும் நாடு ஆகும்.

 இரண்டு நாட்டு மோதல்: இதன் காரணமாக இரண்டு நாடுகளும் பல்வேறு விஷயங்களில் கடுமையாக மோதி வருகின்றன.

முக்கியமாக மத்திய கிழக்கில் நடக்கும் பல்வேறு போர்களில் இரண்டு நாடுகளும் எதிர் எதிர் துருவங்களில் இருக்கின்றன.

ஏமனில் நடக்கும் போரில் ஹவுதி போராளிகளை ஈரான் ஆதரிக்கிறது. அதே சமயம் அந்நாட்டு அரசு மற்றும் ராணுவத்தை சவுதி அரேபியா ஆதரிக்கிறது.

இது போன்ற பல போர்களில் இரண்டு நாடுகளும் எதிர் எதிர் திசையில் இருந்து ப்ராக்சி வார் செய்து கொண்டு இருக்கிறது.

அமெரிக்கா இந்த போரில் இத்தனை காலம் குளிர் காய்ந்து கொண்டு இருந்தது. மத்திய கிழக்கில் பதற்றம் நிலவுவதையும், அவர்களின் எண்ணெய் வளங்களை திருடுவதையும் அமெரிக்கா குறிக்கோளாக கொண்டு செயல்பட்டுக் கொண்டு இருந்தது.

அமெரிக்கா குளிர் காய்ந்து கொண்டு இருந்த தீயில் சீனா தண்ணீரை ஊற்றி கடந்த மார்ச் மாதம் அணைத்தது.

பல ஆண்டுகளாக மோதலில் இருந்த ஈரான் – சவுதி அரேபியா தற்போது இரண்டு நாட்டு உறவை புதுப்பிக்க முடிவு செய்தது.

இரண்டு நாடுகளும் முதல்முறையாக மற்ற நாட்டில் தூதரகம் அமைக்க ஏற்றுக்கொண்டன. அதேபோல் தொலைபேசி உறவை மேற்கொள்ளவும் ஏற்றுக்கொண்டன.

சீனாவின் சமாதான பேச்சே இதற்கு காரணம்.

இஸ்ரேல் பாலஸ்தீனம் போர்: இந்த நிலையில்தான் தற்போது இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் தொடங்கி உள்ளது.

பல இஸ்லாமிய நாடுகளை இது ஒரு குடையின் கீழ் கொண்டு வந்துள்ளது. சவுதி – இஸ்ரேல் இடையே பொருளாதார ஒப்பந்தம் நடக்கப்பட இருந்தது.

இதை மத்திய கிழக்கு நாடுகள் எகிப்து, ஈரான் போன்றவை விரும்பவில்லை.

இந்த ஒப்பந்தத்திற்கு இடையே தற்போது இஸ்லாமியர்களின் பாலஸ்தீனத்தை இஸ்ரேல் தாக்கி வருகிறது.

சவுதி அரேபியா இந்த விவகாரத்தில் தற்போது இஸ்ரேலை ஆதரிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

இந்த மோதல் காரணமாக பாலஸ்தீனத்தை ஆதரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. அதன்படியே இஸ்ரேலை ஆதரிக்காமல் பாலஸ்தீனத்தை ஆதரிப்பதாக சவுதி அரேபியா அறிவித்து உள்ளது.

இந்த நிலையில்தான் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் சவுதி முடி இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் நேற்று இரவு பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல் குறித்து விவாதித்தனர்.

இரு தலைவர்களுக்கிடையிலான இந்த முதல் தொலைபேசி உரையாடல் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.

சுமார் 45 நிமிடங்கள் இவர்கள் ஆலோசனை செய்தது இஸ்ரேல், அமெரிக்கா போன்ற மேற்கு உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.

போரை நிறுத்துவது எப்படி, மக்கள் பிரச்னையை சரி செய்வது எப்படி என்று இவர்கள் இருவரும் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.

Share.
Leave A Reply