பிரான்சில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஆசிரியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

பிரான்சின் அராஸ் நகரில் கம்பெட்டா கல்லூரியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஆசிரியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் இருவர் காயமடைந்துள்ளனர் என பிரான்சின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தாக்குதலை மேற்கொண்டவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்- தாக்குதலை மேற்கொள்வதற்கு முன்னர் அந்த நபர் அல்லாகுஅக்பர் என சத்தமிட்டார் என தகவல்கள் வெளியாகின்றன.

பிரெஞ் மொழி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றுமொரு ஆசிரியரும் பாதுகாப்பு ஊழியரும் காயமடைந்துள்ளனர்.

20வயது செச்னியநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் அவர் தீவிர இஸ்லாத்துடன் தொடர்புடையவர் என பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply