இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே உலகக்கோப்பையின் 12-வது லீக் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இரு அணிகளும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும்.
நடப்பு உலகக்கோப்பை ஒருநாள் போட்டியில் இரு அணிகளின் ஃபார்ம் சிறப்பாக உள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்றுள்ளது. அதே சமயம் நெதர்லாந்து மற்றும் இலங்கையை பாகிஸ்தான் தோற்கடித்துள்ளனர்.
இதனால் இரு அணிகளும் ஹெட்ரிக் வெற்றியை இலக்காகக் கொண்டுள்ளனர். இந்த போட்டிக்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்தனர்.
நடப்பு உலகக் கோப்பையின் முதல் போட்டியும் இந்த மைதானத்தில்தான் நடைபெற்றது. 283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி 36.2 ஓவர்களில் வெற்றி பெற்றது.
நரேந்திர மோடி மைதானத்தில்இதுவரை மொத்தம் 29 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன. இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 16 முறையும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 13 முறையும் வெற்றி பெற்றுள்ளன.