இஸ்ரேல் காசாவில் தரைநடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஈரான் ஐநா ஊடாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹமாஸ் இஸ்ரேல் மோதல் மேலும் விரிவடைவதை விரும்பவில்லை என தெரிவித்துள்ள ஈரான் காசாவில் மோதல்கள் தொடர்ந்தால் தலையிடவேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளது.

இராஜதந்திர வட்டாரங்கள் இதனை தெரிவித்துள்ளன.

ஈரான் ஹமாஸ் இஸ்ரேல் மோதலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டால் அது பிராந்திய மோதலாக வெடிக்கும் ஆபத்துள்ளது.

ஈரான் நேரடியாக இதில் தலையிடலாம் அல்லது சிரியாவில் ஆயுதகுழு ஊடாகவோ அல்லது ஹெஸ்புல்லா அமைப்பை ஆதரிப்பதன் மூலமோதலையிடலாம்.

ஈரானும் ஹெஸ்புல்லா அமைப்பும் ஹமாஸ் இஸ்ரேல் மோதலில் தங்களை ஈடுபடுத்திக்கொள்வதை தவிர்ப்பதற்கான முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது -இந்த நோக்கத்துடன் வளைகுடாவிற்கு கப்பல்களையும் விமானங்களையும் அமெரிக்கா அனுப்பிவருகின்றது.

Share.
Leave A Reply