பண்டாரவளையில் இன்று (15) பெய்த பலத்த மழையினால் நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இதனால் பண்டாரவளை விஹாரைக்கு முன்பாக கொழும்பு – பதுளை பிரதான வீதியும் தடைப்பட்டுள்ளதுடன், வீதியில் சுமார் நான்கு அடிக்கு மேல் வெள்ள நீர் நிரம்பியுள்ளது.

இதனால் புலமைப்பரிசில் பரீட்சை முடிந்து வீடுகளுக்கு செல்ல வந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பொது மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகினர்.

Share.
Leave A Reply