பிக்பாஸில் நேற்று கமல் போட்டியாளர்களிடம் தலைவரைப் பற்றி அதாவது விக்ரமைப்பற்றி உங்கள் கருத்து என்ன என்றார்

மணி கூறுகையில், “ரொம்ப பொறுமையா டெசிஷன் எடுத்தார் சார். எதுனாலும் தனியா போய் யோசிச்சு முடிவெடுப்பார்” என்றார்.

கூல் சுரேஷ் எழுந்து, “சினிமா ஹீரோ மாதிரி இந்த ஊர் மக்களுக்கும் அந்த ஊர் மக்களுக்கும் சண்டை வரக்கூடாது என்று முடிவெடுப்பார். அதாவது சண்டை சச்சரவு இல்லாமல் முடிவெடுப்பார்” என்றார்.

“அப்படினா சச்சரவு இல்லை என்கிறீர்ளா?” என கேட்டார் கமல்.

“ஆமாம் சார். சண்ட வேற, சச்சரவு வேற. கண்டன்ட் வேற” என்று புது விளக்கம் தருகிறார் கூல் சுரேஷ்!

விஜய் எழுந்து “ரெண்டு வீட்டுக்குமே கம்ஃபர்ட்டபிளா இருந்தது” என்றார்.

ஐஷூ ஒருபடி மேலே போய், “பெஸ்ட் கேப்டன். நிறைய பேர் பல ஐடியாஸ் கொடுத்தாலும்கூட அவருக்கு எது சரி என்று படுகிறதோ அதுதான் செய்தார்” என்றார்.

ஜோவிகா சொல்லும் போது “அவர் ரொம்ப பொறுமைசாலி. ஆனால் அவர் ஸ்ட்ராங்கா இருக்க வேண்டிய இடத்தில் ஸ்ட்ராங்கா இல்லை என்பது எனது கருத்து” என்றார்.

தொடர்ந்து வீடியோவை பார்வையிடுங்கள்..

வீடியோ வை பார்வையிட இங்கே அழுத்தவும்:  Bigg Boss Tamil Season 7 16-10-2023 Vijay Tv Show- Day 14

Share.
Leave A Reply