ஐக்கிய நாடுகள் சபைக்கான பாலஸ்தீன தூதர் ரியாட் மன்சூர், இஸ்ரேலிய பிரதமரை “அவர் ஒரு பொய்யர்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
காஸாவில் நேற்றிரவு நடைபெற்ற ராக்கெட் வீச்சில், அல் அரபு மருத்துவமனை தகர்க்கப்பட்டு சுமார் 500 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் பாலஸ்தீன தூதர் ரியாட் மன்சூர் இஸ்ரேலிய பிரதமரை “அவர் ஒரு பொய்யர்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இஸ்ரேலிய பிரதமர் நெதன்யா
இதற்கு முக்கிய காரணம் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு தனது X பக்கத்தில் இம்மருத்துவமனை விபத்து குறித்து பதிவிட்டதுதான்.
அப்பதிவில், “உலகம் முழுவதும் இதை அறிந்து கொள்ள வேண்டும். காஸாவில் உள்ள பயங்கரவாதிகளே இதற்கு காரணம். யார் எங்களது குழந்தைகளை கொடூரமாக கொன்றார்களோ அவர்களே அவர்களின் சொந்த குழந்தைகளையும் கொன்றுள்ளனர்.
Breaking: IDF Spokesperson
From the analysis of the operational systems of the IDF, an enemy rocket barrage was carried out towards Israel, which passed through the vicinity of the hospital when it was hit.
According to intelligence information, from several sources we have,…
— Israel ישראל 🇮🇱 (@Israel) October 17, 2023
ஐடிஎஃப் அல்ல, நாங்கள் ஹமாஸ் கோட்டைகள், ஆயுத கிடங்குகள், பயங்கர வாத இலக்குகளை மட்டுமே குறிவைத்தோம்” என்று தெரிவித்தாக தகவல்கள் கூறுகின்றன.
ஆனால் இஸ்ரேலின் டிஜிட்டல் செய்தி தொடர்பாளர் ஹனாயா நாஃப்தாலி இந்த விபத்து தொடர்பாக வெளியிட்ட ட்வீட்டில், “இஸ்ரேல் விமான படையானது ஹமாஸ் அமைப்பினர் இருப்பதாக நினைத்து மருத்துவனையில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது” என்று பதிவிட்டுள்ளார்.
ஹனாயா நாஃப்தாலி
இந்நிலையில் கோபமடைந்த ஐக்கிய நாடுகள் சபையின் பாலஸ்தீன தூதர் ரியாட் மன்சூர் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு குறித்து கூறுகையில் “அவர் ஒரு பொய்யர்.
’இந்த மருத்துவமனையை சுற்றி ஹமாஸ் தளம் இருப்பதாக நினைத்து இஸ்ரேல் ராக்கெட் தாக்குதல் நடத்தியது’ என்று இவரின் டிஜிட்டல் செய்தி தொடர்பாளர் டீவிட் செய்தார். பின்னர் அதனை நீக்கி விட்டார். அந்த ட்வீட் எங்களிடம் இருக்கிறது. ஆனால் இப்போது கதையை மாற்றியுள்ளனர்.
மேலும் இஸ்ரேலின் ஜிஹாத்தான் தோல்வியுற்ற இந்த ராக்கெட் தாக்குதலுக்கு காரணம். எங்களின் கைகளில் உள்ள உளவுத்துறை ஆதாரங்கள் இதனை சுட்டி காட்டுகிறது.
மேலும் இஸ்ரேலிய இராணுவத்தின் செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், ‘மருத்துவமனையை காலி செய்யுங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.
ஆகவே இந்த குற்றத்திற்கு இஸ்ரேல்தான் பொறுப்பு ஏற்க வேண்டும். உடனடியாக போரை நிறுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
#WATCH | On Israeli PM Netanyahu’s statement that Islamic Jihad is responsible for the Gaza hospital attack, Palestinian Ambassador to the UN, Riyad Mansour says “He is a liar. His digital spokesperson tweeted that Israel did the hit thinking that there was a base for Hamas… pic.twitter.com/Tqs19lc2VD
— ANI (@ANI) October 18, 2023