அண்ணா மாதிரி ஒருத்தர் எனக்கு அது பத்தி சொல்லிக் கொடுத்தாரு. நான் அவரை அண்ணா மாதிரி பார்த்தேன். ஆனா அவரு என்னை அந்த மாதிரி பார்க்கலைன்றது அப்புறம்தான் தெரிஞ்சது.

இந்த எபிசோடில் ‘அழுகாச்சி டாஸ்க்’ என்பதைக் கேள்விப்பட்டவுடன் உள்ளுக்குள் ‘ஜொ்க்’ ஆனது நிஜம்தான். ஆனால் பிக் பாஸ் எடிட்டிங் டீம் மிகத்திறமையாக செயல்பட்டு அதிக சேதமில்லாமல் நம்மைக் காப்பாற்றி விட்டார்கள்.

‘அவனுக்கு என்னப்பா.. எப்பவும் ஜாலியா இருக்கான்!’ என்று மற்றவர்களைப் பற்றி நாம் நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு துயரக்கதையும் பிரத்யேகமான மனவலியும் இருக்கும்.

‘கோவம் வராப்பல காமெடி பண்ணாத’ என்னும் ஒரு திரைப்பட வசனம் உண்டு. ‘கூல்’ சுரேஷ் செய்யும் காமெடி பெரும்பாலும் அப்படித்தான் இருக்கிறது.. தவறு என்று தெரிந்தும் அதை உற்சாகமாக முதலில் செய்து விட்டு பிறகு சரணாகதி அடைந்து விடுகிறார். உருவக்கேலி என்பது எந்த வகையில் வெளிப்பட்டாலும் அது தவறுதான்.

தொடர்ந்து வீடியோவை பார்வையிடுங்கள்…

Bigg Boss 7 Day 15: `மன்னிச்சுடுங்க அக்கா!’ – புதிய கூட்டணி; `ஜெஸ்ஸி’ கூல் சுரேஷின் காதல்

சின்ன வீட்டுக்கான நாமினேஷன் முதலில் தொடங்கியது. ஏற்கெனவே பிளான் செய்த படி ஆளுக்கு இரண்டு ஓட்டுக்களை சரியாக தேர்ந்தெடுத்து நச்சென்று இறக்கியதில் வாக்குகள் வீணாகாமல், சிந்தாமல் சிதறாமல் விக்கெட்டுக்கள் வீழ்ந்தன.

இந்த வாரத்தின் முதல் நாள் பெரிய அசம்பாவிதங்கள் ஏதுமின்றி இயல்பாக கடந்தது. ஆச்சரியகரமாக சிறிது நகைச்சுவைகூட இருந்தது.

அட்டாக் மோடை கைவிட்டு ‘ஃபன் மோடிற்கு’ மாறுவோம் என்று மாயாவும் பூர்ணிமாவும் தீர்மானித்தது நல்ல விஷயம். சரவணனைப் போல் தத்தளிக்காமல் யுகேந்திரன் கேப்டன் பதவியை ஒரு மாதிரியாக சமாளித்து விடுவார் என்று தோன்றுகிறது.

தொடர்ந்து வீடியோவை பார்வையிடுங்கள்…

வீடியோவைபார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil Season 7 17-10-2023 Vijay Tv Show- Day 16

……………………………………………………………………………………………………………………….

வீடியோவைபார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil Season 7 16-10-2023 Vijay Tv Show– Day 15

Share.
Leave A Reply