“புதுடெல்லி:உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற 17-வது லீக்கில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, வங்காளதேசத்துடன் மோதின. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது.
அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்தது. பின்னர் 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்தது.
அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 88 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
சுப்மன் கில் அரைசதம் அடித்து 53 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த ஸ்ரேயஸ் ஐயர் 19 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து களமிறங்கிய விராட் கோலி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுபுறம் அவருக்கு கே.எல்.ராகுல் பக்கபலமாக இருந்தார்.
கடைசியில் சிக்சர் அடித்து தனது சதத்தை பூர்த்தி செய்ததுடன், ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துவைத்தார் விராட் கோலி.முடிவில் இந்திய அணி 41.3 ஓவர்களில் வெற்றி இலக்கை கடந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
விராட் கோலி 103 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 34 ரன்களும் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தனர். இந்திய அணி, உலகக்கோப்பை தொடரில் தொடர்ச்சியாக 4 வெற்றிகளை பதிவுசெய்து புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
தொடர்ந்து இந்திய அணி, தனது அடுத்த லீக் ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள நியூசிலாந்து அணியுடன் வரும் ஞாயிற்றுக்கிழமை மோதுகிறது.இந்நிலையில் வங்காளதேசத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், “மற்றொரு விதிவிலக்கான போட்டி..! வங்கதேசத்துக்கு எதிரான அபார வெற்றியால் எங்கள் கிரிக்கெட் அணிக்கு பெருமை. உலகக் கோப்பையில் தற்போது எங்கள் அணி சிறப்பான பார்மில் உள்ளது. அடுத்த போட்டிக்கு வாழ்த்துக்கள்” என்று அதில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.”,
ரசிகர்களுக்கு விராட் கோலியின் விருந்து
இந்திய அணி 257 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கியது. ரோஹித் – கில் கூட்டணி தொடக்கம் முதலே அதிரடி காட்டியது.
ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான் என சதமும் அரைசதமுமாக ஆடி வரும் ரோஹித் வங்கதேசத்திற்கு எதிராக 2 ரன்களில் அரைசதத்தை நழுவ விட்டார். களத்தில் நங்கூரமிட்ட கில், சற்று பொறுமையாக ஆடினாலும் 52 பந்துகளில் அரைசதம் விளாசினார். ஆனால் அடுத்த 3வது பந்திலேயே அவர் ஆட்டமிழந்தார்.
விராட் கோலி – ஷ்ரேயாஸ் ஜோடி மெல்ல ரன் குவிப்பைத் தொடங்கியபோது ஷ்ரேயாஸ் 19 ரன்களில் ஏமாற்றினார். விராட் கோலி வழக்கம்போல ரசிகர்களுக்கு இந்த முறையும் விருந்து படைத்தார்.
பேட்டில் இருந்து ஒவ்வொரு முறை பவுண்டரிக்கு பந்துகள் செல்லும் போதெல்லாம் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். நிதானம் காட்டிய கோலி 48 பந்துகளில் அரைசதம் பதிவு செய்தார்.
மொத்தம் 97 பந்துகளை எதிர்கொண்ட கோலி 4 சிக்சர், 6 பவுண்டரிகள் விளாசி 103 ரன்கள் விளாசினார். வெற்றிக்கு வித்திட்ட கோலிக்கு ஆட்டநாயகம் விருது வழங்கப்பட்டது. கே.எல் ராகுல் 34 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்து கோலியுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
நடப்பு உலகக்கோப்பைத் தொடரில் தொடர்ந்து நான்கு முறை வெற்றிகளைப் பதிவு செய்துள்ள இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்த்து ஞாயிறுக்கிழமை களமிறங்குகிறது.