பிரதீப்பிற்கும் யுகேந்திரனுக்கும் வித்தியாசம் இருக்கிறது. “பிக் பாஸ் கெடக்கறாரு… நான் போடறேன் ஒரு டீல்… ஓகேவா?” என்று அதிரடியாக ஒப்பந்தத்தை முன் வைத்தார் பிரதீப். அது சாத்தியமா, இல்லையா என்பதைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்படவில்லை. ஆனால்…
‘ம்ஹூம்… நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்டே’ என்கிற காமெடி மாதிரி, வம்புச் சண்டை இழுப்பதற்கு யுகேந்திரன் சரிவரமாட்டார் என்பது இந்த எபிசோடில் அப்பட்டமாக நிரூபணமாகி விட்டது.
அவர் ஆரம்பித்த Prank அவருக்கே பூமராங் மாதிரி திரும்பி வந்தது. Prank என்றால் செய்தவர் சிரிக்க வேண்டும், செய்யப்பட்டவர் காண்டாக வேண்டும். ஆனால் இதில் தலைகீழாக நடந்தது.
ஒரு சண்டையை ஆரம்பிப்பதற்கு முன் அதற்குப் பொருத்தமான தர்க்கம், ஆயுதம், வியூகம் போன்றவற்றையெல்லாம் முன்பே தயாராக வைத்திருக்க வேண்டும்.
‘வாடா… வாடா… சண்டைக்கு வாடா’ என்று திடீரென மூடு வந்து அழைத்தால் முட்டுச்சந்தில் வைத்து கும்மி விடுவார்கள். அதற்கான உதாரணம்தான், இந்த எபிசோடின் நிகழ்வு.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?