தான் செய்யும் மட்டரகமான நகைச்சுவையைப் பற்றி சுரேஷிற்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. வெளியே அப்படிப் பேசி பேசி, முதிராத இளைஞர்களிடம் கைத்தட்டல் வாங்கி அதன் மூலம் புகழ் பெற்றுவிட்டதால் அதையே இங்கும் தொடரலாம் என்று நினைக்கிறார்.

வினுஷாவின் தலைக்கு மேலே வந்த கத்தி யூடர்ன் எடுத்து விஜய்யின் மீது பாய்ந்தது. ஏற்கெனவே ஸ்ட்ரைக் கார்டு வாங்கிய நிலையில், மீண்டும் அவர் விளையாட்டில் ஆக்ரோஷத்தோடு செயல்பட்டதை பார்வையாளர்கள் ரசிக்கவில்லை என்பது போல் தெரிகிறது. எனவே குறைந்த வாக்குகள் பெற்று வெளியேற்றப்பட்டார்.

மேலும் முதல் வாரத்தில் விஜய்யிடம் தென்பட்ட சுறுசுறுப்பு பிறகு அப்படியே காணாமல் போய் விட்டது. எங்குமே அவர் தென்படவில்லை. “வன்முறை கூடாதுன்னுதான் நான் சொன்னேன். ஆனா நீங்க அப்படியே செயலிழந்து நின்னுட்டீங்க” என்று கமல் சுட்டிக்காட்டியது சரியான காரணம்.

விஜய்யின் வன்முறையைப் போலவே சுரேஷின் எரிச்சலூட்டும் காமெடியையும் கமல் கண்டித்தது நல்ல விஷயம். வெளியே தியேட்டர் வாசல்களிலும் திரைப்பட பிரமோஷன் கூட்டங்களிலும் செய்த அதே கொனஷ்டைகளை வீட்டுக்குள்ளும் செய்தால் மக்கள் ரசிப்பார்கள் என்று அவர் தப்புக் கணக்கு போட்டிருக்கிறார்.

மட்டரகமான நகைச்சுவையை பொது சமூகம் எப்போதுமே ரசிப்பதில்லை. சுரேஷிற்குள் ஆதாரமான நகைச்சுவையுணர்வு இருக்கிறது. அதை அவர் தரமான முறையில் வளர்த்துக் கொண்டால் மிளிர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (DAY 21 EP 22)

வீடியோ வை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil Season 7 22-10-2023 Vijay- Day 21

…………………………………………………………………………………………………………………………………………………….
Bigg Boss 7 Day 20: கேப்டன் ஆன பூர்ணிமா, கொந்தளித்த நிக்சன்; எவிக்ட் ஆகப்போவது யார்?

சுரேஷ் காமிராவைப் பார்த்து கலங்கிக் கொண்டிருந்தார். ‘அப்பா.. பரிசு வாங்கியிருக்கேன்.. வரும் போது எடுத்துட்டு வரேன்’.. என்று தன் குடும்பத்தாரிடம் அவர் நெகிழும் போது சுரேஷின் இன்னொரு பக்கத்தைப் பார்க்க முடிந்தது.

கடந்த வாரத்தில் விக்ரம் இருந்ததைப் போலவே யுகேந்திரனும் ஒரு குழப்பமான கேப்டனாக இந்த வாரத்தில் செயல்பட்ட விஷயம், கமலின் விசாரணை நாளில் துல்லியமாக வெளிப்பட்டது.

 

இரண்டு வீட்டிற்கு பொதுவாகவும் நல்லவராகவும் இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினாலும் பல இடங்களில் தடுமாற்றம் இருந்தது.

மீண்டும் அதேதான். ஒரு தலைவர் நல்லவராக இருந்தால் மட்டும் போதாது, வல்லவராகவும் இருக்க வேண்டும். பல பேருக்குத் தடையாக இருந்து அதிக எண்ணிக்கையிலான கற்களைப் பெற்றார் மாயா.

அதற்காக அவர் சந்தோஷப்பட்டது சரியான விஷயம்தான். வீட்டிலும் சரி, வெளியிலும் சரி,

மாயாவை வெறுக்கும் நபர்கள் ஒருவேளை அதிகமிருந்தாலும் ஏதாவது ஒரு செயல் தொடர்ந்து நிகழ்வதற்கு அவர் காரணமாக இருக்கிறார்.

தொடர்ந்து வீடியோ வை பாருங்கள்….

வீடியோ வை பார்வையிட இங்கே அழுத்தவும்:  Bigg Boss Tamil Season 7 21-10-2023 Vijay- Day 20 

Share.
Leave A Reply