“ஒரு நாட்டின் குடிமக்கள் மற்றொரு நாட்டிற்கு செல்வதற்கு விசா எடுக்க வேண்டியது அவசியம் ஆகும்.

சில நாடுகளில் விசா எடுப்பதற்கான வழிமுறைகள் மிகவும் எளிமையாகவும், சில நாடுகளில் இந்த வழிமுறைகள் மிகவும் கடுமையாகவும் இருக்கின்றன.

அந்த வகையில், இந்தியாவில் இருந்து இலங்கை செல்வதற்கு இந்தியர்கள் இனி விசா எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று இலங்கை அரசு அறிவித்து இருக்கிறது.

இந்த அறிவிப்பின் மூலம் இந்தியர்கள் விசா எடுக்காமலேயே இலங்கைக்கு சென்றுவர முடியும். விசா இன்றி வெளிநாட்டவரை அனுமதிக்கும் திட்டத்தை இலங்கை அரசு சோதனை முறையில் துவங்கி இருக்கிறது.

அதன்படி அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை இந்தியர்கள் மட்டுமின்றி சீனா, ரஷியா, மலேசியா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசியா என ஆறு நாடுகளை சேர்ந்த குடிமக்கள் இலங்கை நாட்டிற்கு விசா எடுக்காமல் பயணம் செய்ய முடியும்.

இலங்கை அமைச்சரவையில் ஒப்புதலை பெற்ற பிறகே, இந்த அறிவிப்பு வெளியாகி இருப்பதாக தெரிகிறது. இலங்கை அரசின் இந்த அறிவிப்பு காரணமாக அடுத்த ஐந்து மாத காலத்திற்கு இந்தியா உள்பட உலகின் ஏழு நாடுகளை சேர்ந்த குடிமக்கள், இலங்கைக்கு விசா எடுக்காமலேயே பயணம் செய்ய முடியும். அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்கு பிறகும், இந்த நடைமுறை அமலில் இருக்குமா என்ற கேள்விக்கு தற்போது வரை இந்த பதிலும் இல்லை.”,

Share.
Leave A Reply