மாதம்பே பனிரெண்டாவ வனப்பகுதியில் மனித மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு வியாழக்கிழமை (26) மாலை கிடைத்த தகவலின் அப்படிடையிலேயே மனித எலும்புக் கூட்டின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மாதம்பே பனிரெண்டாவ பிரதான வீதியில் உள்ள வனப் பகுதியில் சுமார் 150 மீற்றர் தூரத்தில் இந்த எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் சிலாபம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வரவழைக்கப்பட்டு சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

மாதம்பை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply