முன்னதாகவே மத்திய கிழக்கு கடல் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்காவின் போர் கப்பல்களுடன், தற்போது கூடுதலாக 900 ராணுவ வீரர்களை வியானன்று அனுப்பியுள்ளது அமெரிக்கா

காஸா மீதான இஸ்ரேல் தாக்குதல் நீடிக்கும் நிலையில் மத்திய கிழக்கில் அமெரிக்கா முதல் தாக்குதலை தொடுத்துள்ளது. கிழக்கு சிரியாவில் இரான் புரட்சிகரப் படையினரால் பயன்படுத்தப்பட்டு வந்த இரண்டு ஆயுத சேமிப்பு கிடங்குகளின் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியது.

இராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது இரான் ஆதரவு போராளிக் குழுக்கள் சமீபத்தில் நடத்திய தாக்குதல்களுக்கான பதிலடி இது என அமெரிக்க பாதுகாப்பு செயலர் லாயிட் ஆஸ்டின் தெரிவித்தார்.

அமெரிக்காவின் இந்தத் தாக்குதல்கள், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கும் இடையில் நடந்து வரும் மோதலில் இருந்து வேறுபட்ட தனிப்பட்ட ஒன்று என்றும் அவர் தனது அறிக்கையில் கூறினார்.

இந்தத் தாக்குதல் குறித்து இரான் உடனடியாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
விளம்பரம்

அமெரிக்கா நடத்திய இந்த வான்வழித் தாக்குதல் இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு நடந்துள்ளது. இந்த தாக்குதலில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்பட்டதா என்பது இன்னும் தெரியவில்லை.

அமெரிக்க பாதுகாப்பு செயலர் லாயிட் ஆஸ்டின்

ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது இரானின் சமீபத்திய தாக்குதல்களுக்கான பதிலடி இது என அமெரிக்க பாதுகாப்பு செயலர் லாயிட் ஆஸ்டின் தெரிவித்தார்.

‘இராக், சிரியா மீது அமெரிக்கா தற்காப்பு தாக்குதல்’ – அமெரிக்கா

“இந்தத் துல்லியமான தற்காப்புத் தாக்குதல்கள் அனைத்தும், இராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்க படைகள் மீது இரான் ஆதரவு குழுக்களின் தொடர் தாக்குதல்களுக்கான பதிலடி தான். இந்தத் தாக்குதல்கள் அக்டோபர் 17 ஆம் தேதி அன்று தொடங்கியது,” என ஆஸ்டின் தனது அறிக்கையில் தெரிவித்தார்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு இடையில் மோதல் தொடங்கியதில் இருந்து, இராக்கில் உள்ள அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவுக்குழுக்கள் மீது குறைந்தது 12 முறையும், சிரியாவில் உள்ள அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவுக் குழுக்கள் மீது சுமார் நான்கு முறையும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்களுக்கு இரான் ஆதரவுபெற்ற ஆயுதக்குழுக்களே காரணம் என அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

காஸாவைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், லெபனானில் இருந்து இயங்கும் ஹெஸ்புலா ஆயுதக் குழுவினருக்கும், இரான் ஆயுதங்கள் மற்றும் பணம் கொடுத்து ஆதரவளித்து வருகிறது.

இரான் ஆதரவோடு அமெரிக்கா மீது தாக்குதல்?

காஸாவில் வன்முறை தொடர்ந்தால், அப்பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலில் இருந்து அமெரிக்கா தப்ப முடியாது என இரான் எச்சரித்துள்ளது.

“அமெரிக்கப் படைகளுக்கு எதிராக இரான் ஆதரவுடன் நடத்தப்படும் இந்த தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை உடனடியாக நிறுத்த வேண்டும்,” என ஆஸ்டின் கூறினார்.

“அமெரிக்கப் படைகளுக்கு எதிராக இரான் ஆதரவு ஆயுதக்குழுக்கள் தாக்குதல்களைத் தொடர்ந்தால், எங்கள் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நாங்கள் மேற்கொண்டு தேவையான நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டோம்,” எனவும் அவர் கூறினார்.

மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க படைகளை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிராக இரானின் அதிஉயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்ததாக அமெரிக்காவின் அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

மேலும், வியாழன் அன்று நியூயார்க்கில் நடந்த ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்ற இரானின் வெளியுறவுத் துறை மந்திரி ஹொசைன் அமிரப்டோலாஹியன், காஸாவில் வன்முறை தொடர்ந்தால், அப்பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலில் இருந்து அமெரிக்கா தப்ப முடியாது என எச்சரித்துள்ளார்.

வெளியுறவுச் செயலர் ஆண்டனி

வெளியுறவுச் செயலர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டின் இருவரும், நிலைமை தீவிரமடைந்தால், அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என வெளியுறவுச் செயலர் ஆண்டனி கூறியிருந்தார்

மத்திய கிழக்கிற்கு 900 பேரை அனுப்பிய அமெரிக்கா

சில வாரங்களுக்கு முன் அமெரிக்கா தனது போர்க் கப்பல்கள் மற்றும் விமானங்களை மத்திய கிழக்கில் உள்ள கடல் பகுதிக்கு அனுப்பியது. வியாக்கிழமையன்று மேலும் 900 அமெரிக்க ராணுவ வீரர்கள் அங்கு அனுப்பப்படுவதாக அமெரிக்கா தெரிவித்தது.

மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது இதற்கு முன்னதாகவும் தாக்குதல்கள் நடந்துள்ளன. அதற்கு அமெரிக்காவும் தனது பதிலடியை கொடுத்துள்ளது.

மத்திய கிழக்கில் நடந்த ஒரு தாக்குதலில் அமெரிக்க ஒப்பந்ததாரர் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து, இந்த ஆண்டு மார்ச் மாதம், கிழக்கு சிரியாவில் உள்ள இரான் ஆதரவு ஆயுதக்குழுக்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியது அமெரிக்கா.

 

 

Share.
Leave A Reply