18 பொலிஸ் பிரிவுகளில் உள்ள வங்கிகளுக்குச் சொந்தமான ஏரிஎம்களில் (ATM) அருகில் காத்திருந்து பணம் எடுக்கவரும் நபர்களை ஏமாற்றி அவர்களின் ஏரிஎம் அட்டைகளை அபகரித்து சுமார் ஒரு கோடி ரூபா பணத்தை மோசடியாக மீளப் பெற்றமை தொடர்பில் இருவரைக் கைது செய்துள்ளதாக கடுவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 13 அட்டைகள் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன சந்தேக நபர்களிடமிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த அட்டைகள் 2 அரச வங்கிகளுக்கும் 2 தனியார் வங்கிகளுக்கும் சொந்தமானவை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடுவெல விஹாரை மாவத்தையில் வீதித்தடை கடமையில் ஈடுபட்டிருந்த கடுவெல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கன் வீரசிங்கவின் அறிவுறுத்தலின்பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி ருவன் சதுரங்க உள்ளிட்டவர்கள் சந்தேக நபர்கள் வந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி இவர்களைக் கைது செய்ததாகப் பொலிஸபர் தெரிவித்தனர்.