முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் கைவேலி மயில்குஞ்சன் குடியிருப்பினை சேர்ந்த 68 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று இரவு 11.00 மணியளவில் நடைபெற்றுள்ளது.

இந்த கொலை சம்பவத்தினை செய்த மயில்குஞ்சன் குடியிருப்பு கைவேலியில் வசித்துவரும் 31 வயதுடைய இராணுவத்தில் பணியாற்றும் நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோத மதுபாவனை அதிகரித்து காணப்படும் குறித்த கிராமத்தில் இராணுவத்தினரின் முகாமில் இருந்துஅகற்றப்படும் இருப்புகளை விற்பனை செய்து வந்துள்ளார்கள் அதனால் ஏற்பட்ட பண பரிமாற்றம் தொடர்பிலான தகராறால் இவர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ளது.

இதன்போது 31 வயதுடைய சந்தேகநபர் தடியால் குடும்பஸ்தர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளார். இதன்போது காயமடைந்த குடும்பஸ்தர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

தாக்குதல் மேற்கொண்ட சந்தேக நபரான இராணுவத்தில் பணியாற்றும் 31 வயதுடைய நபரை புதுக்குடியிருப்பு பொலழஸார் கைது செய்துள்ளதுடன் பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலலஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Share.
Leave A Reply