“இந்த விதிமீறலுக்கு நிச்சயம் தண்டனை இருக்கு. கருடபுராணத்தின் படி கடுமையா இருக்கப் போவுது. நேரடியா நாமினேஷனுக்கு கூட அனுப்பிடலாம்” என்பது போன்ற பேச்சுக்கள் உலவியதால் மாயாவும் சுரேஷூம் ஜெர்க் ஆனார்கள்.

ரேங்க்கிங் டாஸ்க் என்பது முன்பெல்லாம் தெருக்கூத்து மாதிரி விடிய விடிய நடக்கும். ஆனால் இந்த முறை இவர்கள் அடித்த கூத்து காரணமாக பிக் பாஸிற்கே போரடித்து சீக்கிரம் முடித்து துரத்திவிட்டார். Ranking Task, Pranking Task மாதிரி அபத்தமாக முடிந்துவிட்டது.

 

இந்த சீசனின் வித்தியாசமான அம்சமே இரண்டு வீடுகள்தான். இரண்டு தரப்பும் தனித்தனியாக நின்று எதிரும் புதிருமாக மோத வேண்டும். ஆனால் ‘சோற்றில் உப்பு இல்லை’ என்கிற உப்பு பெறாத காரணத்திற்காக ‘நான் அத்தை வீட்டுக்குப் போறேன்’ என்கிற மாதிரி மாயா பையைத் தூக்கிக் கொண்டு சின்ன பிக் பாஸ் வீட்டிற்குக் கிளம்பியது அராஜகம். ஆட்டத்தை சுவாரஸ்யமாக்கலாம். ஆனால் அதன் அடிப்படையே ஆட்டம் காண்பது போல் செய்யக்கூடாது.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

வீடியோ வை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil Season 7 27-10-2023 Vijay- Day 26

……………………………………………………………………………

Bigg Boss 7 day 25: `அந்த வார்த்தை தப்பு!’ – பணம் உனக்கு; டைட்டில் எனக்கு பிரதீப் – மாயா டீல்

‘என்னப்பா. எல்லோரும் ஈஸியா மன்னிச்சிட்டிங்க.? அவங்க நல்ல கேப்டனா இருந்தா அவங்களுக்குத்தான் ப்ளஸ்.

ரேங்க்கிங் டாஸ்க் என்பது உத்தரவாதமாக சண்டை நிகழும் போராட்டம். எந்தவொரு சீசனாக இருந்தாலும் இந்த டாஸ்க்கின் போது உக்கிரமாக அடித்துக் கொள்வார்கள்.

ஆனால் இந்த ஏழாம் சீசனில் ‘விவாதம்’ என்கிற பெயரில் நடந்ததெல்லாம் முற்றிலும் அபத்தம். சமூகத்தின் வர்க்கப் பிரச்சினையை எல்லாம் அநாவசியமாக உள்ளே கொண்டு குட்டையைக் குழப்பினார் பிரதீப். பிறகு உரையாடலின் அழுத்தம் தாங்காமல் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார். ‘கோபத்தோடு எழுபவன், நஷ்டத்தோடு அமர்வான்’ என்கிற பொன்மொழிக்கு இந்தச் சம்பவம் ஒரு நல்ல உதாரணம்.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

 

வீடியோ வை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil Season 7 26-10-2023 Vijay Tv Show- Day 25
Share.
Leave A Reply