காலி பிரதேசத்தில் 18 வயது யுவதி ஒருவர் கடந்த ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதியில் இருந்து காணாமல் போயுள்ளதாக ஹிக்கடுவை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு காணாமல் போன யுவதி காலி தொடம்புவ பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார்.

இவர் கடந்த ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி தனது தாயுடன் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு தன்னை தேடும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்றும் பொலிஸில் புகாரளிக்க வேண்டாம் என்றும் தன்னால் மீண்டும் வீட்டிற்கு வர முடியாது என்றும் கூறியுள்ளார்.

இவர் காலி பிரதான பஸ் நிலையத்தில் காணப்பட்டமை தொடர்பான காட்சி ஒன்று வீதி கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது.

இந்த யுவதி தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு ஹிக்கடுவை பொலிஸார் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Share.
Leave A Reply