இஸ்ரேல் – ஹமாஸ் மோதலுக்கு மத்தியில் காசா பகுதியில் சிக்கியுள்ள 13 இலங்கையர்கள் ரஃபா எல்லையை கடந்து, தற்போது எகிப்துக்குள் நுழைவதற்கான அனுமதிக்காக காத்திருக்கின்றனர்.

போரினால் பாதிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதியில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட்ட 17 இலங்கையர்களில் 13 பேர் குறித்த செய்தியை பலஸ்தீனத்துக்கான இலங்கைப் பிரதிநிதி பென்னட் குரே தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனத்திலிருந்து வெளியேறிய 13 பேரில் ஒரு இலங்கைப் பெண்ணும், குழு தற்போது ரஃபா எல்லைக் கடக்கும் மற்றும் எகிப்தின் நுழைவாயிலுக்கு இடைப்பட்ட பகுதியில் வைக்கப்பட்டிருப்பதாகவும், நுழைவதற்கான ஒப்புதலுக்காகக் காத்திருப்பதாகவும் உறுதிப்படுத்தினார்.

இன்று 17 இலங்கை பிரஜைகள் பாலஸ்தீனத்தை விட்டு, ரஃபா எல்லைக் கடவு வழியாக செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply