யாழ்ப்பாணத்தில் பல்வேறு வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபட்டு இந்தியாவில் தலைமறைவாகியிருந்த நபர் ஒருவர் இன்று இந்தியாவிலிருந்து விமானத்தில் பலாலி ஊடாக நாடு திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபட்டு வெளிநாடுகளுக்கு தப்பித்த தேவா, பிரசன்னா ஆகியோரின் சகாவே இவ்வாறு கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை இந்தியாவில் இருந்து விமானம் மூலம் பலாலி விமான நிலையத்தை வந்தடைந்த அவரை யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புபிரிவு பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் தெ.மேனன் தலமையிலான குழுவினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்பதனால் தேடப்பட்டு வந்த 27 வயதுடைய சந்தேக நபர் என்று பொலிஸார் கூறினர்.