இது லவ்வாதான் இருக்கணுமா… ஃபீலிங்ஸ் இருக்குன்னு சொல்லிட்டுதான் உன் கிட்ட பேசவே ஆரம்பிச்சேன். நமக்கு கம்பெனி வேணும்.
இந்த எபிசோடில் சில சுவாரஸ்யமான உணர்ச்சி மோதல்களும் குழப்பமான தீர்வுகளும் இருந்தன.
மணி – ரவீனா கூட்டணி கூட இப்போது அவுட் ஆஃப் போகஸில் சென்று விட்டது. நிக்சன் – ஐஷூ விவகாரம்தான் மெயின் மேட்டராக முன்னணியில் நின்று குழப்பத் தீயில் எரிந்து கொண்டிருக்கிறது.
சார். இவன் என்னை கிள்ளிட்டான் சார்’ என்கிற பிரதீப்பின் காமெடியான ஸ்கூல் பையன் புகார் வேறு இன்னொரு பக்கம் பற்றிக் கொண்டிருந்தது.
‘இருக்கு.. ஆனால் இல்லை..’ என்கிற ரொமான்ஸ் ட்ராமா நிக்சன் – ஐஷு கூட்டணியிடம் தொடர்ந்து கொண்டிருந்தது. “பக்கத்துல வாயேன்… சொல்றேன்…” என்ற நிக்சன், ஐஷுவின் கையை திடீரென்று பாசமாகப் பிடிக்க முகம் சுருக்கி சட்டென்று கையை விடுவித்துக் கொண்டார் ஐஷு.
பேச்சை மாற்றும் விதமாக “பிரதீப் பண்றது ஓவரா இருக்கு. அவன் மட்டும்தான் இங்கே ஆம்பளையா? எனக்கு கேமை விட்டு வெளியே போகணும்னு தோணுது” என்று பிரதீப் பற்றி ஐஷு புகார் சொல்ல “எனக்கு கோபம்லாம் வரல.
இந்த கான்செப்ட்டே அது தானே?!” என்ற நிக்சன், ஐஷுவின் முகத்தில் அதிருப்தி தெரிந்தவுடன் சட்டென்று பல்டி அடித்து “நான் அவனுக்கு பயப்படலாம் இல்ல.. ஜோக்கர் அவன்” என்று ஐஷுவிற்கு சார்பாக உரையாடலை மாற்றினார்.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
வீடியோ வை பார்க்க இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil Season 7 01-11-2023 Vijay Tv Show- Day 31