காசாவில் கடுமையான காயங்களிற்குள்ளானவர்களுடன் சென்றுகொண்டிருந்த அம்புலன்ஸ் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
காசாவின் சுகாதார அமைச்சு இதனை உறுதி செய்துள்ளது.
அம்புலன்ஸில் கடுமையான காயங்களுக்குள்ளான 15 முதல் 20 நோயாளிகள் காணப்பட்டனர் -காசாவிற்கு வெளியே சிகிச்சைக்காக அல்ஸிபா மருத்துவமனையிலிருந்து எகிப்திற்கு ரபா எல்லை வழியாக அவர்களை கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது என காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
காசாவை சூழ்ந்த இஸ்ரேல் படை… ‘பைகளில் திருப்பி அனுப்புவோம்’ என ஹமாஸ் எச்சரிக்கை..!
புதுடெல்லி,காசா மீதான தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறுகையில், இஸ்ரேல் ராணுவ வீரர்கள் காசா பகுதியை சுற்றிவளைத்து விட்டதாகவும், இனி போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்தார்.
இதனிடையே காசாவில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் பாலஸ்தீனர்கள் பலர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் காசாவை சூழ்ந்த இஸ்ரேல் ராணுவ வீரர்களை பைகளில் திருப்பி அனுப்புவோம் என ஹமாஸ் அமைப்பின் ராணுவ பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. “,