மோதலில் ஹமாசினால் பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட இலங்கையர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேலிற்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கைப்பிரஜையான சுஜித் பண்டார யட்டவர உயிரிழந்துள்ளதை இஸ்ரேல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தங்களின் இன்டர்போல் பிரிவினரே இதனை உறுதிசெய்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த சுஜித்பண்டார யட்டவரவின் பிள்ளைகளின் மரபணுவை எடுத்து பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் இந்த முடிவிற்கு வந்துள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் தாக்குதலை மேற்கொண்டவேளை இலங்கையர் ஒருவர் காணாமல்போயிருந்தார் .