இந்த முத்த விவகாரம் ஐஷுவின் பெற்றோரை ரொம்பவே வருத்தத்தில் தள்ள, அவர்கள் இரு தினங்களுக்கு முன் நேரடியாக பிக் பாஸ் செட்டுக்கே சென்றுவிட்டார்களாம்.
பிக் பாஸ் முதல் சீசனில் பிரபலமான ஆரவ் – ஓவியாவின் மருத்துவ முத்தத்தைப் போல் இப்போது சீசன் 7ல் ஐஷு – நிக்சனின் மிரர் முத்தமும் படு பாப்புலராகிவிட்டது.
கண்ணாடி வழியே நிக்சனும் ஐஷுவும் முத்தமிட்டுக் கொண்ட அந்தக் காட்சியைக் கண்டவர்களில் சிலர்,
இதென்ன, தெலுங்கு பிக் பாஸ் போல இருக்கே’ எனச் சொல்ல, வேறு சிலரோ, `இனிமேல்தான் ஷோ சூடுபிடிக்கும்னு சொல்லுங்க’ என அதை ரசிக்கவும் செய்தார்கள்.
இப்படியெல்லாம் கன்டென்ட் கொடுத்தால்தான் ஷோவில் நூறு நாள் இருக்க முடியுமென நினைத்து அவர்கள் இருவரும் இதைச் செய்தார்களா தெரியவில்லை.
ஆனால் இந்த முத்த விவகாரம் ஐஷுவின் பெற்றோரை ரொம்பவே வருத்தத்தில் தள்ள, அவர்கள் இரு தினங்களுக்கு முன் நேரடியாக பிக் பாஸ் செட்டுக்கே சென்றுவிட்டார்களாம்.
இது குறித்து ஷோ தொடர்புடைய வட்டாரங்களில் பேசியபோது, “ஆமாங்க, நீங்க கேள்விப்பட்டது நிஜம்தான்.
ஐஷுவின் அப்பாவும் அம்மாவும் பிக் பாஸ் வீடு இருக்கிற பூந்தமல்லி இ.வி.பி.செட்டுக்கே வந்துட்டாங்க. கண்ணாடி வழியே அவங்க ரெண்டு பேரும் முத்தம் பரிமாறிக்கிட்ட அந்த எபிசோடைப் பார்த்து அவங்க ரொம்பவே மனசு உடைஞ்சு போயிருக்காங்க.
ஐஷு
‘குடும்ப மானம் போகுது. இனி ஒரு நாள் கூட இந்த ஷோவுல எங்க பொண்ணு இருக்க வேண்டாம். தயவு செய்து அவளை வெளியில் அனுப்பிடுங்க’ன்னு நிகழ்ச்சிப் பொறுப்பாளர்களிடம் அவங்க அழுகையும் ஆக்ரோஷமுமா கேட்டாங்க. சேனல் தரப்பில் அவங்களைச் சமாதானப்படுத்தியதா தெரியுது.
‘எமர்ஜென்சியான காரணம் இல்லாம இப்படி திடீர்னு இங்க வந்து ஒரு போட்டியாளரைக் கூட்டிட்டுப் போக முடியாது. அதனால நீங்க கிளம்புங்க. நாங்க அவங்ககிட்டப் பேசறோம்’னு சேனல் தரப்புல இருந்து சொல்லியிருக்காங்க.
அப்பவும் கேக்காம அந்தப் பெற்றோர் ஐஷுவைப் பார்த்துப் பேசணும்னு அடம்பிடிக்க, சேனல் இறங்கி வரவே இல்லை. ஒரு போட்டியாளருக்காக விதிமுறைகளை மீறினா அது தவறான முன்னுதாரணமாகிடும்னு சொன்ன நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்,
ஐஷுவிடம் அவருடைய அப்பா அம்மா சொல்ல விரும்பியதை மட்டும் கேட்டு, தாங்களே சொல்லி எச்சரிப்பதாகச் சொல்லி ஒருவழியாகச் சமாதானப்படுத்தி அனுப்பியிருக்காங்க. அவங்க அங்கிருந்து போன பிறகு அவங்க சொன்ன தகவலும் ஐஷுவுக்கும் அனுப்பப்பட்டிருக்குனு தெரியுது” என்கிறார்கள்.
ஐஷுவின் பெற்றோர் அவருக்கு அனுப்பிய மெசேஜ் அவருக்குச் சென்று சேரும் முன்பே, ஐஷுவும் நிக்சனும் கண்ணாடி தாண்டி நேரடியாகவே முத்தம் கொடுத்துக்கொண்டனர் என்பதாக சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இது ஐஷுவின் பெற்றோரை மேலும் துயரப்படுத்தியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
ஐஷுவின் நட்பு வட்டத்தில் சிலரிடம் பேசினோம்.
“எங்களுக்கென்னவோ இது சந்தேகமா இருக்கு. நல்லா கேம் ஆடிட்டிருந்த பொண்ணு திடீர்னு எப்படி இப்படி நடந்துப்பா?
இவ ஏற்கெனவே அதாவது முந்தைய சீசன்லயே பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் போயிட்டு வந்திருக்கா.
அமீர் பாவனியும் நிறைய டிப்ஸ் கொடுத்து அனுப்பியிருப்பாங்க. அதனால இவ கூடவே நல்லா பழகற மாதிரி நடிக்கிற சில சக போட்டியாளர்கள், எங்கே இவ தங்களுக்கு வலுவான போட்டியாளரா உருவாகிடுவாளோன்னு பயந்து, இவகிட்ட எதையாவது சொல்லி திசை திருப்புறாங்களோனு தோணுது” என்கிறார்கள்.
ஐஷுவின் பெற்றோர் சொன்ன விஷயங்கள் அவருக்கு கன்வே செய்யப்பட்டதா என்பதை வரும் எபிசோடுகளில் ஐஷுவின் நடவடிக்கைகளை வைத்துத்தான் தெரிந்துகொள்ள முடியும். எது எப்படியோ, இந்த மிரர் முத்தம் தற்போது டெரர் கிளப்பியிருக்கிறது.