“உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்று வரும் 37வது லீக் ஆட்டத்தில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
மதியம் 2 மணிக்கு தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.இதில் முதலில் களமிறங்கிய, ரோகித் சர்மா 40 ரன்கள் எடுத்து எடுத்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து சுப்மன் கில் 23 ரன்கள் எடுத்தார்.பின்னர், களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் 77 ரன்களும், கே.எல் ராகுல் 8 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர்.
சூர்யா யாதவ் 22 ரன்கள் எடுத்தார். விராட் கோலி 120 பந்தில் சதம் எடுத்து 101 ரன்கள் விளாசினார்.
விராட்டுன் ஜடேஜா 28 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.இந்நிலையில், 50 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து 327 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது.
ஆனால், ஆரம்பம் முதலே சொற்ப ரன்களில் தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் ஆட்டமிழந்தனர்.இதில், குயின்டன் டி காக் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்,
தொரடர்ந்து, தெம்பா பவுமா-11, அய்டன் மார்க்ரம்-9, ஹெயின்ரிச் கிளாசன்-1, ராசி வேன் டெர் துசன்-13, டேவிட் மில்லர்-11, கேஷவ் மகாராஜ்-7, மாக்ரோ ஜான்சன்-14, காகிசோ ரபாடா-6, லுங்கி ங்கிடி டக் அவுட் என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஷ
இதனால், தென் ஆப்பிரக்கா அணி 27.1 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 83 ரன்களில் சுருண்டது.இதன்மூலம், இந்திய அணி 243 ரன்களில் இமாலய வெற்றியை அடைந்தது.”,