பொலன்னறுவை வரலாற்றுச் சிறப்புமிக்க திம்புலாகல ஆரண்ய சேனாசன மலைப்பகுதியில் இலங்கையில் மிகவும் அரிதான மற்றும் மிகப்பெரிய கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலன்னறுவை தொல்பொருள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்தக் கல்வெட்டு 45 அடி நீளமும் 18 அடி உயரமும் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொல்பொருள் திணைக்களத்தின் தலைமை அலுவலக கல்வெட்டு பிரிவு அதிகாரிகள் மற்றும் பொலன்னறுவை தொல்பொருள் ஆய்வு குழுவினர் இணைந்து இந்த அரிய கல்வெட்டைக் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த கல்வெட்டை நகலெடுப்பதற்கு ஒரு மாதத்துக்கு மேல் தேவைப்படும் என தொல்லியல்துறை தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply