பாலஸ்தீன் – இஸ்ரேல் போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இன்று சவூதி அரேபியாவில் அரபு லீக் அவசர உச்சி மாநாடு நடைபெற உள்ளது.

பாலஸ்தீனின் காசா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

அகதிகள் முகாம், மருத்துவமனைகள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி பல ஆயிரக்கணக்கான குழந்தைகள், பெண்கள், முதியோர்களை கொன்று குவித்து வருகிறது.

பாலஸ்தீன் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என அரபு நாடுகள் உட்பட பல நாடுகள், ஐநா அமைப்பு, பல்வேறு மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

ஆனால், இஸ்ரேல் அதை காதில் வாங்காமல் தாக்குதல்களை தொடர்ந்து வருகிறது. அதற்கு ஹமாஸ், ஏமன் ஹௌதி போராளிகள், லெபனான் ஹிஸ்புல்லா படையினர் என பல தரப்பில் இருந்து இஸ்ரேல் மீது நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று இந்த போர் தொடர்பாக அரபு லீக் அவசர மாநாடு சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடைபெறுகிறது. கடந்த அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி எகிப்து தலைநகர் கெய்ரோவில் அரபு லீக் உச்சி மாநாடு நடைபெற்றது.

அதில் இஸ்ரேல் – பாலஸ்தீன் போர் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அந்த மாநாட்டில் சவூதி அரேபியா, பஹ்ரைன், குவைத், கத்தார், ஈராக், சைப்ரஸ், ஜோர்டான் ஆகிய நாடுகள் பங்கேற்றன. அவர்கள் ஜேர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதிகள், கிரீஸ் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் வசித்து வரும் பாலஸ்தீனியர்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில் அந்த மாநாடு நடந்து முடிந்து 20 நாட்கள் கழித்து மீண்டும் அரபு லீக் நாடுகள் அவசர கூட்டத்தில் கூட்டி இருப்பது சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

சவூதி அரேபிய தலைநகர் ரியாத்தில் அரபு லீக் அவசர உச்சி மாநாடு நடைபெற உள்ளதால் அந்த நகரைச் சூற்றி பாதுகாப்படுத்தப்பட்டு உள்ளது. அந்த கூட்டத்தில் இஸ்ரேல் ஹமாஸ் இடையே நடந்துவரும் போர் மற்றும் காசா பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய மனிதாபிமான உதவிகள் குறித்து ஆலோசிக்க அனைத்து நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் வருகை தருகிறார்கள்.

பாலஸ்தீன் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையிலான ராஜாங்க முயற்சிகளை சவூதி அரேபியா மேற்கொண்டு உள்ளதாகவும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சவூதி அரேபியா தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Share.
Leave A Reply