கலகெதர நீதிவான் நீதிமன்ற சுற்றுவட்டாரத்தில் 12 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 58 வயதுடைய நபர் ஆவார்.
குறித்த சிறுமி தனது தாயுடன் இருக்கையில் அமர்ந்திருக்கும்போதே பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளார்.
குற்றம் சுமத்தப்பட்டவர் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கலகெதர நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.