4 வயதை பூர்த்தியடைந்த குழந்தைகளை கட்டாயம் முன்பள்ளியில் சேர்க்க வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார்.

இன்று (22)பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பான யோசனைகள் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த கல்வி அமைச்சர், 10ஆம் ஆண்டில் பொதுத் தரப் பரீட்சை நடைபெற உள்ளதாகவும், ஒரு குழந்தை 17 வயதில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற முடியும் எனவும் தெரிவித்தார்.

Share.
Leave A Reply