காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடி பாம் வீதி வீடொன்றில் இருந்து 23 வயது இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

வியாழக்கிழமை (23) இரவு 8 மணியளவில் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என அறியமுடிகின்றது.

மீட்கப்பட்டுள்ள சடலம் ஜலீல் ரசாத் என அடையாளம் காணப்படுள்ளதுடன் அவரது மனைவி 7 மாத கர்ப்பிணி எனவும் தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply