1948ம் ஆண்டின் ஆரம்பத்தில்

யூதர்களின் எறிகணைகளும் மோட்டர்களும் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்ட டிரக்குகளும் அராபிய பகுதிகளை அச்சத்திற்குட்படுத்திக்கொண்டிருந்தன.

விரைவில் இஸ்ரேலாக மாறவிருந்த புதிதாக பிரிக்கப்பட்ட நிலப்பகுதி மதவாத சண்டையில் சிக்குண்டிருந்த நிலையில் இவ்வாறான சூழல் காணப்பட்டது.

தொடர்ச்சியாக நீடித்த எறிகணை தாக்குதலிற்கு மத்தியில், டிரக்குகள் சைரன்களின் அச்சுறுத்தும் ஒலிகளையும் போலியான கதறல்களையும் , வெளியேறுமாறு எச்சரிக்கும் செய்திகளை ஒலிபரப்பின.

இதன் பின்னர் 750,000 பாலஸ்தீனியர்களுக்கும் அவர்களது சந்திததியினருக்கும் தங்கள் பகுதிகளிக்கு வீடுகளிற்கு மீள திரும்புவது சாத்தியமற்ற விடயமாகியது.

1980களில் இஸ்ரேலின் இரகசிய ஆவணங்கள் பகிரங்கமாக்கப்பட்டவேளை

இஸ்ரேலின் இரகசிய நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தெரியவந்தன.

இஸ்ரேல் உளவியல் யுத்தத்தின் ஒருபகுதியாக முன்னெடுத்த ஒலிபரப்புகள் மக்கள் அங்கிருந்து தப்பியோடும் நிலையை எப்படி உருவாக்கின என்பதும் தெரியவந்தது.

அதிர்ச்சிதரும் நடவடிக்கைகளும் தொடர்ச்சியான எறிகணை தாக்குதல்களும் ,அராபிய மொழியில் ஒலிபெருக்கிகள் உரிய விதத்தில் பயன்படுத்தபட்டமையும் மிகுந்த பலனை அளித்தன என 1948ம் ஆண்டின் இஸ்ரேலின் பாதுகாப்பு அறிக்கையொன்று தெரிவிக்கின்றது. அது யூதப்போராளிகளே பாலஸ்தீனியர்களின் வெளியேற்றத்திற்கு முக்கிய காரணம் என தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு மாவட்டமும் இடம்பெயர்வு அலையை சந்தித்தது, ஒரு குறிப்பிட்ட பகுதியில் எங்கள் நடவடிக்கை தீவிரமடைந்ததும் இவ்வாறான நிலைமை காணப்பட்டது என இஸ்ரேலிய அறிக்கை தெரிவித்தது.

தப்பியோடிய அராபியர்கள் மீண்டும் தங்கள் பகுதிகளிற்கு திரும்ப முயலக்கூடும் என்பதால் நாங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட சந்தர்ப்பங்களில் பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டியிருந்தது எனவும் அந்த அறிக்கை தெரிவித்திருந்தது.

அந்தவேளை அங்கிருந்து தப்பியவர்களின் சந்ததியினர் பின்னர் பாலஸ்தீன அகதிகள் சமூகத்தை உருவாக்கினர்.காசா பள்ளத்தாக்கில் தற்போது வசிப்பவர்களில் 70 வீதமானவர்கள் அகதிகள் என கருதப்படுகின்றனர்.

இந்த நக்;பா அல்லது பேரழிவு என அழைக்கப்படுகின்றது இன்றுவரை இரு தரப்பிலும் மிகுந்த சர்ச்சைக்குரிய விடயமாக காணப்படுகின்றது.

இந்த விபரங்களை பற்றிய கல்விசார் கேள்விகள் உள்ளன,இது எந்த அளவிற்கு திட்டமிடப்பட்டது -எந்த அளவிற்குஇது போரின் சூழ்நிலைகள் ?எந்த அளவிற்கு சியோனிசத்தின் கருத்தியல் மையமாக காணப்பட்டன போன்ற கேள்விகள் உள்ளன என தெரிவிக்கும் கொலம்பிய பல்கலைகழகத்தின் பேராசிரியரும் பாலஸ்தீனத்தின் மீதான யுத்தத்தின் 100 வருடங்;கள் நூலின் ஆசிரியருமான ரசீட் கலீடி த எட்வேர்ட் ஆனால் மிகப்பெருமளவானவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர் என்பதை எவரும் மறுக்கவில்லை என்கின்றார்.

சமீப நாட்களில் ஐநாவின் நிபுணர்களும் பாலஸ்தீன தலைவர்களும் இரண்டாவது நக்பா குறித்த அச்சத்தை வெளியிட்டுள்ளனர்-ஹமாசின் 7ம் திகதி தாக்குதலிற்கான பதிலடியாக இஸ்ரேல் இராணுவம் காசா மீது குண்டுவீச்சு தாக்குதலை மேற்கொள்வதுடன் காசாவின் 1.1 மில்லியன் மக்களை தென்பகுதிக்கு செல்லுமாறு எச்சரிப்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இன்று நாங்கள் காணும் விடயங்கள் காரணமாக 1948 நக்பா மீண்டும் இடம்பெறும் ஆபத்துள்ளது என்கின்றார் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்திற்கான ஐநாவின் விசேட அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிஸ்.மீண்டும் அது இடம்பெறுவதை தடுப்பதற்கு சர்வதேச சமூகம் அனைத்தையும் செய்யவேண்டும் என்கின்றார் அவர்.

1948 வெளியேற்றம் பாலஸ்தீனிய அடையாளத்தின் ஒரு உயிரூட்டும் சக்தியாக காணப்படுகின்றது,மேலும் இது இஸ்ரேலின் மக்கள் தொகையை மாற்றியது.

பெருமளவு எண்ணிக்கையான மக்கள் வெளியேற்றப்பட்டனர் இது நடந்திராவிட்டால் யூததேசம் என்ற ஒன்றே இருந்திருக்காது என கலிடி தெரிவிக்கின்றார்.

பிரிவினையின் கீழ் யூதர்களிற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் பெருமளவு அராபியர்கள் இருந்திருப்பார்கள் என்கின்றார் அவர்.

1947 நவம்பர் பிரிட்டனின் கீழ் காணப்பட்ட பாலஸ்தீனத்தை ஐக்கிய நாடுகள் அராபிய- யூததேசங்களாக பிரித்தது.

பிரிட்டனின் அதிகாரத்தின் கீழ் பாலஸ்தீனம் காணப்பட்டவேளை யூதகுடியேற்றவாசிகளின் எண்ணி;க்கை அதிகரித்த அதேவேளை அராபிய மக்களின் எண்ணிக்கை யூதர்களை விட இரண்டுமடங்கு அதிகமாக காணப்பட்டது,

ஆகவே ஐக்கியநாடுகள் இரண்டு நாடுகளை உருவாக்கியவேளை யூதர்களின் நாட்டில் குறிப்பிடத்தக்க அளவு அராபிய சிறுபான்மையினர் காணப்பட்டனர்.

பிரிவினை குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டதும் இந்த வரைபடத்தில் உள்ள பகுதிகள் அனைத்திலும் மோதல்கள் ஆரம்பித்தன காலிட் தெரிவிக்கின்றார்.

சிறந்த முறையில் கட்டமைக்கப்பட்டிருந்த யூத படையினர் அராபிய போராளிகளை தோற்கடித்தனர் மோதல்களின் போது பல அராபிய மக்கள் தப்பியோடினர் அல்லது வெளியேற்றப்பட்டனர் என்கின்றார் காலிட்.

மீண்டும் திரும்பிவரமுயன்றவேளை ஊடுருவுபவர்கள் என தெரிவிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர் – அவர்கள் தங்கள் பகுதிகளுக்கு திரும்பிச்செல்லமுடியாமல் கடுமையாக தடுக்கப்பட்டனர்.

வெளிநாட்டு அராபிய தலைவர்களின் வேண்டுகோள்களின் பெயரிலேயே பாலஸ்தீனியர்கள் தங்கள் மண்ணிலிருந்து வெளியேறினார்கள் 1948 மே மாதம் தாங்கள் இஸ்ரேல் மீது மேற்கொண்ட தாக்குதலை நியாயப்படுத் அராபிய தலைவர்கள் பாலஸ்தீனியர்களின் வெளியேற்றத்தை பயன்படுத்தினார்கள் என இஸ்ரேல் பல வருடங்களாக தெரிவித்துவந்தது என இஸ்ரேலின் வரலாற்றாசிரியர் பெனிமொறிஸ் தெரிவித்தார்.

பாலஸ்தீனியர்களின் வெளியேற்றத்தை இஸ்ரேல் இராணுவம் குறைமதிப்பிற்குபடுத்த முயன்றது என 1986 இல் அவர் எழுதினார்.

பாலஸ்தீன இனச்சுத்திகரிப்பு என்ற தனது நூலில் இலன்பப்பே 1948 மோதலின் போது இஸ்ரேல் முன்னெடுத்த போர்தந்திரோபாயங்களில் பிலன் டலெட் என்பது குறித்து சுட்டிக்காட்டுகின்றார்.

இந்த நான்காவது மற்றும் ஐந்தாவது திட்டங்கள் ஒரு விடயத்தை தெளிவாக தெரிவித்தன – பாலஸ்தீனியர்கள் வெளியேறவேண்டும் வெளியேற்றப்படவேண்டும் என்பதே அது.

இந்த திட்டம் நடைமுறைப்படுத்தி முடிந்தபோது பாலஸ்தீனத்திற்கு சொந்தமான மக்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் – 800.000 மக்கள் அவர்களின் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.531 கிராமங்கள் அழிக்கப்பட்டன,11 நகரப்பகுதிகள் வாழ்ந்த மக்கள் இன்றி வெறுமையாகின.

காசாவில் இஸ்ரேல் தற்போது முன்னெடுத்துக்கொண்டிருக்கின்ற நடவடிக்கைகள் மத்தியில் கடந்த கால சம்பவங்கள் குறித்து பாலஸ்தீனியர்கள் அச்சமடைவது புரிந்துகொள்ளக்கூடியது என்கின்றார் காலிட்.

பாலஸ்தீனியர்களை எகிப்தின் சைனாய்க்கு செல்வதற்கு அனுமதிக்கவேண்டும் என சமீபத்தில் எகிப்திடம் இஸ்ரேல் வேண்டுகோள் விடுத்ததை சுட்டிக்காட்டும் அவர் அவர்கள் மீண்டும் திரும்பிவருவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என கரிசனை வெளியிடுகின்றார்.

ஆனால் ஸ்திரமின்மை குறித்து உணர்ந்துள்ள எகிப்திய தலைவர்கள் இஸ்ரேலின் இந்த வேண்டுகோளை ஏற்கமாட்டார்கள்.

தற்போதைக்கு குண்டுவீச்சிலிருந்து தப்புவதற்காக காசா மக்களை காசாவின் தென்பகுதிக்கு செல்லுமாறு இஸ்ரேல் கேட்டுக்கொண்டுள்ளது.

எனினும் அது பலனளிக்கப்போவதில்லை ஏனென்றால் இஸ்ரேல் தென்பகுதியிலும் குண்டுவீசுகின்றது அங்கும் எவரும் பாதுகாப்பாகயில்லை என தெரிவிக்கும் அவர் ஏன் அவர்கள் வெளியேறவேண்டும் அவர்கள் உங்களை வடக்கில் கொலை செய்கின்றனர் தெற்கிலும் கொலை செய்கின்றனர் உங்கள் உணவும் வீடும் எங்கிருக்கின்றதோ அங்கேயே ஏன் நீங்கள் தொடர்ந்தும் வாழக்;கூடாது என கேள்வி எழுப்புகின்றார்

-தமிழில் ரஜீவன்-

Share.
Leave A Reply