இன்றைய இஸ்ரேல் உருவானதில் மிக முக்கிய பங்கு வகிப்பது, ‘பெல்ஃபோர் பிரகடனம்’ (Balfour Declaration)
பிரித்தானியா அரசு எவ்வாறு பலஸ்தீன அரேபியர்களுக்கு துரோகம் இழைத்தது என்பதை அறிந்து கொள்ள பெல்பேர் பற்றி அறிந்து கொள்ளவேண்டும்.
2017 இல் அந்த பிரகடனத்தின் நூற்றாண்டுவிழாவை பிரிட்டன் அரசு இலண்டனில் கொண்டாடியது. உலகம் முழுவதுமுள்ள அரேபியர்கள் அந்த நாளை தங்களின் உரிமையை, அடிப்படை வாழும் உரிமையையே
பறித்த நாளாகப் பார்க்கிறார்கள்.
முதலாவது உலகப் போர் (1914—-18)
முதல் உலக யுத்தத்தில் பிரித்தானியா தலைமையில் நேச நாடுகளும், துருக்கியின் ஓட்டோமான் காலிஃபட் (Ottoman Caliphate) ஜெர்மனி ஆகிய அச்சு மைய அதிகார நாடுகள் எதிர் அணியிலுமிருந்து சண்டையிட்டன.
4ஆண்டுகள் நடைபெற்ற யுத்தத்தில் 85 இலட்சம் வீரர்கள் இரண்டு பக்கமும் மடிந்தனர். 70 இலட்சம் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். யுத்தம் ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்க
கண்டங்களில் நடைபெற்றது.
யூதர்களைக் கவர…
1914 இல் யுத்தம் தொடங்கப்பட்ட போது, தங்களுக்கு வலு சேர்க்க, யூதர்களின் ஆதரவு தேவை என பிரித்தானியாவின் ‘யுத்த அமைச்சரவை’ ((War cabinet) ) முடிவு செய்தது.
காரணம் அவர்களிடமிருந்த செல்வம். அதன்படி அன்றைய பிரித்தானியா பிரதமர் அஸ்குயுத், (H. H. Asquith) பலஸ்தீனம் உட்பட ஓட்டோமான் பேரரசின் பகுதிகளைக் கைப்பற்றுவது
பற்றி ஆராய ஒரு குழு அமைத்தார்.
அந்தக்குழு 1916 இல் அறிக்கை சமர்பித்த போது, பிரித்தானியா பிரதமராக இருந்தவர் டேவிட் லொயிட் ஜோர்ஜ் (David Lloyd George). அவரது எண்ணம் ஓட்டோமான் பேரரசை பல
துண்டுகளாக்க வேண்டும் என்பதாகும் (தற்போது உக்ரைன் போரில் அமெரிக்காவின் நோக்கமான, ரஷ்யாவை பல துண்டுகளாக ஆக்குவதுபோன்று).
இதற்கிடையில் 1917 இல் காசா பகுதியில் ஜெருசலேம் பகுதியை ஓட்டோமன் படைகளிடமிருந்து கைப்பற்ற 6 மாதங்களுக்கு மேல் கடும் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
தொடர்ந்து இழுபறி நிலை. இந்த நிலையில் உலகம் முழுவதுமுள்ள யூதர்களின் ஆதரவை தங்களுக்கு சாதகமாகத் திரட்ட பிரித்தானியா திட்டமிட்டது. அன்றைய தினம்
யூதர்கள் பெரும்பாலும் கந்துவட்டி, வங்கி மற்றும் நிதித்துறை ஆகியவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
பிரித்தானியா அமைச்சரவையில் விவாதம்
1917 ஒக்ரோபர் 31 இல், பிரிட்டன் அமைச்சரவையில் இப்பிரச்சனை
விவாதிக்கப்பட்டது.
அதில் ‘யூதர்களுக்கு நாடு’ என்று ஓர் அறிக்கை வெளியிடுவது, அதனை
பிரச்சாரம் செய்வது, அதன் மூலம் நேச நாடுகளின் போர் முயற்சிகளுக்கு
யூதர்களின் ஆதரவைத் திரட்டுவது என்று முடிவெடுக்கப்பட்டது.
அதனடிப்படையில் பலஸ்தீனத்தை பிரிப்பது பற்றி ஒரு தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.
பலஸ்தீனர்களுக்கு நிரந்தர துயரம் தந்த 67 வார்த்தைகள்
ஓர் ஏகாதிபத்திய நாடு முதன் முதலாக யூத இனவாதக் குறிக்கோள்களை
பிரதிபலித்தது.
இந்த தீர்மானத்தில்தான் பழைய விவிலியத்தில் உள்ளது போல்
‘யூதர்களுக்கு ஒரு தாய்நாடு வேண்டும்’ என நிறைவேற்றப்பட்டது.
1917 இல் பிரித்தானியாவின் வெளியுறவு அமைச்சராக இருந்தவர் ஆர்தர்
பெல்பேர் (Arthur Balfour). அவர் இங்கிலாந்தில் யூதர்களின் மதிப்பு மிக்க
தலைவராக இருந்த வோல்டர் ரோத்சைல்ட் (Walter Rothschild) பிரபுவுக்கு 1917 நவம்பர் 2ந் திகதி
எழுதிய கடிதத்தில், யூதர்களுக்கு தாயகம் அமைப்பதற்கான அமைச்சரவையின் தீர்மானம்
இணைக்கப்பட்டிருந்தது.
ஆங்கிலத்தில் மொத்தம் 67 வார்த்தைகள் கொண்ட அந்த கடிதத்தின் முதல் வரியில் ‘மேன்மை
தங்கிய மன்னரின் அரசு, பாலஸ்தீனத்தில் யூத மக்களுக்கு ஒரு தாயகம்
உருவாக்குவதற்கு சாதகமான எண்ணம் கொண்டுள்ளது.
அந்த குறிக்கோளை நனவாக்கிட தன்னிடமுள்ள அனைத்து முயற்சிகளையும் பிரித்தானியா
பயன்படுத்திடும் (His Majesty’s Government view with favour the establishment in Palestine of a national home for the Jewish people, and will use their best endeavours to facilitate the
achievement of this object)” என்று
தொடங்கியது.
இதுவே இஸ்ரேல் உருவாகிய ஆரம்பப்புள்ளி. உலகின் பெரும்பான்மையோரின் பொதுப்புத்தியில் பதிவாகியிருப்பது போன்று, ஜெர்மனியின் ஹிட்லர் யூதர்களைக்
கொன்று குவித்ததால், ஐக்கிய நாடுகள் சபை தீர்மானத்தின் அடிப்படையில்
உருவான நாடல்ல, இஸ்ரேல் அதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்பே, பிரித்தானியாவின் ‘இராஜதந்திரத்தின்’ – அதாவது சூழ்ச்சியின் விளைவாக உருவாக்கப்பட்டது
இரண்டாவது நிபந்தனை, ‘இஸ்ரேல் உருவாகும்கும்வரை யூதர்கள் அவரவர் வாழும் நாடுகளில்
அவர்களின் குடிமை மற்றும் மத உரிமைகள் பாதுகாக்கப்படும்’ என்பது.
முதல் நிபந்தனையான பலஸ்தீனத்தில் வாழ்ந்த அரேபியர்களின் குடிமை மற்றும் மத உரிமைகள் மட்டும் 1948 முதல் 2023 வரை இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவால்
உதாசீனப்படுத்தப்படுகின்றன.
பிரித்தானியாவின் துரோகங்கள்
பலஸ்தீன மக்களின் குடிமை மற்றும் மத உரிமைகளை பாதிக்கும் எந்த முடிவையும் எடுக்கமாட்டோம் என்ற நிபந்தனையை பிரித்தானியா கைவிட்டுவிட்டது.
மெக்காவின் ஷெரீப்பாக இருந்த ஹூசைன் பின் அலி (Hussein bin Ali), முதல் உலகப் போரில், ஓட்டோமான் பேரரசை வீழ்த்த உதவியவர்.
அதற்கு கைமாறாக முழு அரபுப் பிரதேசத்தையும் தனி சுதந்திர நாடாக மாற்றுவோம் என பிரித்தானியா வாக்குறுதி அளித்திருந்தது.
பல்ஃபோர் பிரகடனத்தை ஹூசைன் கடுமையாக எதிர்த்ததால், அவரை சவூதி அரேபிய சுல்தானைக் கொண்டு கொன்றது பிரித்தானியா.
1917 இல் பலஸ்தீன மக்களின் எழுச்சி
பலஸ்தீனத்தில் அன்று வாழ்ந்த மக்களில் 90% இஸ்லாமியர்களும்
கிறிஸ்தவர்களுமான அரேபியர்கள். அன்றைய பலஸ்தீனத்தில் வெறும் 8% யூதர்கள்.
பெல்ஃபோர் பிரகடனம் (Balfour Declaration) வெளியிடப்பட்டவுடன் பலஸ்தீனப் பகுதியில் பெரும் கலவரம் வெடித்தது.
அதனைத் தொடர்ந்து 1919 இல் அமைக்கப்பட்ட கிங்-கிரேன் கமிஷன், இராணுவ பலத்தினால் அல்லாமல் இதனை அமுல்படுத்த சாத்தியமே இல்லை என்ற கருத்தை அனைத்து பிரித்தானிய அதிகாரிகளும் கொண்டுள்ளனர் என்று தெரிவித்தது.
1936 இல் பிரித்தானியா அரசு மீண்டும் பலஸ்தீனத்தில் வாழ்ந்த அராபியர்களின்
சொத்துரிமை மற்றும் மத உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று வாக்குறுதிஅளித்தது. ஆனால்
நடைமுறையில் கைவிட்டது.
முதல் உலகப் போருக்குப் பின்
முதல் உலகப் போரில் நேச நாடுகள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பலஸ்தீனப் பகுதியின் நிர்வாகத்தை பிரித்தானியாவிடம் நேச நாடுகள் அளித்தன.
அந்த போர் நிறுத்த ஒப்பந்தங்களில் பெல்ஃபோர் பிரகடனத்தை இணைத்ததன் வாயிலாக அது அமுலாக்கப்பட வேண்டிய சர்வதேச சட்டமாக (International obligation) மாறியது.
போருக்குப் பின் உலகம் முழுவதிலிருந்தும் யூதர்களை பிரித்தானியா பலஸ்தீனப் பகுதிகளில்
குடியமர்த்தியது.
யூதர்கள் தங்களுக்கென்று இராணுவம் அமைத்து பலஸ்தீனர்களை தாக்கினர்.
பிரித்தானியா அதைக் கண்டு கொள்ளவில்லை.
1948 இல் இன அழிப்பு
1948 மே 14 அன்று பிரித்தானியா பலஸ்தீனத்தை விட்டு வெளியேறியவுடன், இராணுவத்தை
கொண்டிருந்த யூதர்கள், அமெரிக்க உதவியுடன், பாலஸ்தீனத்தின் பெரும்பகுதியைக் கைப்பற்றினர்.
சுமார் 15000 பாலஸ்தீன அரேபியர்கள் கொல்லப்பட்டனர். மிகப் பெரிய அளவில் இனஒழிப்பு நடவடிக்கைகள் பலஸ்தீன அரேபியர்களுக்கு எதிராக நடத்தப்பட்டது.
7 இலட்சம் பலஸ்தீனர்கள் தங்கள் மூதாதையர் வீடுகளிலிருந்து விரட்டப்பட்டனர்.
ஆயிரக்கணக்கான பலஸ்தீன கிராமங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
இவையனைத்தும் அமெரிக்க ஆதரவுடன் நடைபெற்றன. அதே தினத்தில் யூதர்கள் ‘இஸ்ரேல்’ என்ற நாட்டை அறிவித்தனர். அனைத்து ஆவணங்களிலும் இருந்த ‘பலஸ்தீனம்’ என்ற பெயரை அழித்தனர்.
இந்த தினத்தை பலஸ்தீனர்கள் ‘அல்-நக்பா’ (Al Nakba) என்றழைக்கின்றனர். நக்பா
என்றால் பேரழிவு என்று அர்த்தம்.