எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று கமலஹாசன் பிக்பாஸ் சீசன் 7ல் அடிக்கடி சொல்லும் வசனம். வீட்டை பிக்பாஸ் வீடு ஸ்மால் பாஸ் வீடு என்று இரண்டாகப் பிரித்து போட்டியாளார்களுக்கிடையே பிரச்சனை ஏற்படுத்தும் வகையில் பலவித டாஸ்கையும் கொடுத்து வந்தார் பிக்பாஸ்.
இதில் முதல் வாரத்திலேயே ஓட்டுகளின் அடிப்படையில் அனன்யா வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
அடுத்தவாரம், தன்னால் இனி அங்கு இருக்கமுடியாது என்று தானாகவே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் இலக்கியவாதி பவா செல்லத்துரை.
அதற்கு அடுத்த வாரம் விஜய் வெளியேறினார்.
அதன் பின்பு வினுஷா தேவி வெளியேற்றப்பட்டார்.
அதற்கடுத்தவாரம் யுகேந்திரன்.. இப்படி பிக்பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்கள் படிப்படியாக வெளியேறிய பிறகு, பிக்பாஸ் மீண்டும் 5 கண்டஸ்டண்டை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பிவைத்தனர்.
இதில் காண்டான பிக்பாஸ் வீட்டிலிருப்பவர்கள் புதிதாக வந்த 5 கண்டஸ்டண்டை ஓரம் கட்டினர். இதில் ஒருவருக்குள் ஒருவருக்கு பிரச்னை அதிகமானதால் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று சிலர் கூற, கமலஹாசனால் பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டார்.
அதற்கடுத்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்கு வந்த வேகத்திலேயே வெளியேறினார் அன்னபாரதி, பிறகு கானா பாலா… இப்படி பல போட்டியாளர்கள் வெளியேறினாலும், இன்னும் சிலர் வீட்டிற்குள் இருப்பதே தெரியாமல், அவர்கள் எதற்காக இருக்கிறார்கள் என்று மக்களே கேட்டு வரும் நிலையில், கமல்ஹாசன் சென்றவாரம் பூகம்பம் டாஸ்க் என்று கடுமையான டாஸ்கை கொடுத்துள்ளார்.
இதில் போட்டியாளர்கள் தோற்றால், பிக்பாஸ் வீட்டிலிருந்து இரண்டு கண்டஸ்டண்ட்கள் வெளியேற்றப்பட்டு அதற்கு பதில் ஏற்கனவே வெளியேற்றபட்ட போட்டியாளர்கள் மீண்டும் வீட்டிற்குள் வரவழைக்கப்படுவதாக கூறியிருந்தார்.
அக்ஷயா
அது உண்மையா பொய்யா என்று தெரியாத நிலையில், போட்டியாளர்களால் பூகம்பம் டாஸ்கை வெற்றிகொள்ள முடியவில்லை. அதனால் இன்று நடந்த டபுள் எவிக்ஷன் பிராசஸில் ஆர்.ஜே.பிராவோ, அக்ஷயா வெளியேற்றப்பட்டார்கள்.
வீடியோ ஐ பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil Season 7 25-11-2023 Vijay Tv Show