போலி விசா ஆவணங்களை பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேற முயன்ற இரண்டு இலங்கை இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் எல்லை கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் கிளிநொச்சி மற்றும் முல்லேரியாவைச் சேர்ந்த 25 மற்றும் 27 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

துருக்கிய எயார்லைன்ஸ் விமானம் மூலம் ஒஸ்ரியாவிற்கு செல்ல முற்பட்ட இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் போலி விசா ஆவணங்களை சமர்ப்பித்ததை அடுத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் பொரளையை சேர்ந்த தரகர் ஒருவரிடமிருந்து போலியான வீசா ஆவணங்களை பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

Share.
Leave A Reply