“நான் எதை எதையெல்லாம் விமர்சிக்கணும்னு நீங்க முடிவு பண்ண முடியாது. ‘இந்த வாரம் மட்டும் அவரு கேக்கலைன்னா இருக்கு’ன்னு நீங்க சொல்ல முடியாது. கேக்கலைன்னா என்னை என்ன பண்ணிடுவீங்க?”
`வீட்டிற்குள் இரண்டிற்கும் மேற்பட்ட குழுக்கள் இருக்கின்றன’ என்பதை நிக்சனின் வலுவான சாட்சியம் அதிகாரப்பூர்வமாக நிரூபித்தது. சர்க்கரை பதுக்கல் விவகாரத்தை, தெளிவற்ற விளக்கத்தினால் மேலும் சொதப்பினார் ஜோவிகா. ‘பேசாம சரண் அடைஞ்சறதுதான் நல்லது’ என்று பூர்ணிமா வழிகாட்டினார். கமலின் கிடுக்கிப்பிடி கேள்விகள் அவ்வாறாக இருந்தன.
இப்படி திறமையாக மடக்குவது, நிதானமாக அறிவுரை சொல்வது போன்ற ஏரியாவில் கமல் எப்போதும் கில்லிதான். ஆனால் சற்றாவது கடுமையான நடவடிக்கையையும் கூடவே எடுக்கலாம். இல்லையென்றால் எல்லாமே ஜாலியான தோரணையில் சாதாரணமாக முடிந்து விடுகிறது.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
வீடியோ ஐ பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil Season 7 25-11-2023 Vijay Tv Show