யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 07 பேர் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக தமிழகம் சென்றுள்ளனர்.
தனுஷ்கோடிக்கு அண்மித்த பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை தமிழக கடலோர பாதுகாப்பு பிரிவினர் அவர்களை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த போது,
இலங்கையில் மிக மோசமான பொருளாதார நெருக்கடி காணப்படுவதால் , தொடர்ந்து அங்கு வாழ முடியவில்லை என்பதால், தமிழகம் வந்துள்ளோம் எனவும் , இதற்காக மன்னாரில் இருந்து தனுஷ்கோடி பகுதியில் எம்மை இறக்கி விட படகோட்டிக்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பணம் வழங்கியதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளனர்.