யாழ்ப்­பாணப் பல்­க­லைக்­க­ழக சட்­ட­பீ­டத்தில் தமிழ் மொழி­மூலக் கற்கை நெறி­யையும் ஆரம்­பிக்க வேண்டும் என்ற குரல் இன்று மேலெ­ழத்­தொ­டங்­கி­யுள்­ளது. சட்­ட­பீட மாண­வர்­களே இந்த விவ­கா­ரத்தை வெளி உல­கிற்குக் கொண்­டு­வந்­துள்­ளனர். இதற்கு ஆத­ர­வா­கவும் எதி­ரா­கவும் பல கருத்­துக்கள் வரத்­தொ­டங்­கி­யுள்­ளன.

விரி­வு­ரை­யாளர் இளம்­பி­றையன் யாழ்ப்­பாணப் பல்­க­லைக்­க­ழகம் தமிழ் மக்­க­ளுக்­கான பண்­பாட்டுப் பல்­க­லைக்­க­ழ­க­மாக இருப்­பதால் தமிழ் மொழி மூலக்­கற்­கையை ஆரம்­பிக்க வேண்டும் என்ற கருத்தை முன்­வைத்­துள்ளார். ஆய்­வாளர் நிலாந்தன் ஒரு பண்­பாட்டுப் பல்­க­லைக்­க­ழகம் என்ற நிலை பல­வீ­ன­மாகி வரு­கின்­றது என கவ­லையை வெளி­யிட்­டுள்ளார்.

கொழும்பு மைய தமிழ் ஆர்­வ­லர்கள் ஆங்­கி­ல­மொழிக் கற்­கையே தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற கருத்தை முன்­வைத்து வரு­கின்­றனர். தொழில் தேர்ச்­சிக்கு ஆங்­கில மொழிக்­கல்­வியே உகந்­த­தாக இருக்கும் என்­பது அவர்­க­ளது கருத்­தாக உள்­ளது.

சட்­ட­பீ­டத்தை பொறுத்­த­வரை தமிழ் மொழி­மூல கற்­கைத்­து­றையை அறி­மு­கப்­ப­டுத்­து­வதில் பெரிய அக்­க­றையைக் காட்­ட­வில்லை. அதனை ஆரம்­பித்தால் சிங்­க­ள­மொழிக் கற்­கை­யையும் ஆரம்­பிக்க வேண்­டிய நிர்ப்­பந்தம் வரும் என்­பது அவர்­க­ளது வாத­மாக உள்­ளது.

இங்கு கற்கை மொழி என்ற விடயம் இதற்குப் பின்னால் உள்ள அர­சி­ய­லி­னா­லேயே முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றது

2009 ஆம் ஆண்டு ஆயு­தப்­போ­ராட்டம் மௌனிக்­கப்­பட்­டதைத் தொடர்ந்து இனி­யொரு தடவை தமிழ் மக்கள் மத்­தி­யி­லி­ருந்து போராட்ட எழுச்சி வரக்­கூ­டாது என்­பதில் இலங்கை அரசு மிகக் கவ­ன­மாக உள்­ளது.

எனவே மீள்­எ­ழுச்சி வராத வகையில் சிங்­க­ள­ம­ய­மாக்கல் வேலைத்­திட்­டத்தை தமிழர் தாய­கத்தில் அது நகர்த்தி வரு­கின்­றது. இதற்கு பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளையும் ஒரு கரு­வி­யாகப் பயன்­ப­டுத்­து­கின்­றது.

இதை­விட விகாரை மூலமும் பொரு­ளா­தார ஆக்­கி­ர­மிப்பு மூலமும் சிங்­கள மய­மாக்கல் வேலைத்­திட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. இலங்கை அரசு மட்­டு­மல்ல இந்­திய அரசு, மேற்­கு­லகம் என்­ப­னவும் மீள்­எ­ழுச்சி வரக்­கூ­டாது என்­பதில் கவ­ன­மாக உள்­ளன.

இந்­தியா 13 ஆவது திருத்­தத்­திற்கு மேல் தமிழ் அர­சியல் செல்லக் கூடாது என்­பதில் கவ­ன­மாக உள்­ளது.

மேற்­கு­லகம் அடை­யாள அர­சி­ய­லுக்கு மேல் செல்­லக்­கூ­டாது என்­பதில் கவ­ன­மாக உள்­ளது. மூன்று தரப்பும் தமிழ் மக்­களின் இறைமை அர­சி­யலை ஏற்றுக் கொள்ளத் தயா­ராக இல்லை.

இதனால் தமிழ் அர­சி­யலை தரக்­கு­றைப்பு செய்ய வேண்டும் என்­பதில் இம்­மூன்று தரப்­புக்கும் இடையே ஓர் ஒருங்­கி­ணைப்பு இருக்­கின்­றது எனலாம். சுவஸ்­திகா விவ­காரம் கூட இறைமை அர­சி­யலை நீர்த்­துப்­போக செய்து அடை­யாள அர­சி­யலை மேலே கொண்டு வரும் ஒரு முயற்­சியே.

இலங்கை அரசு யாழ்ப்­பாண மாவட்­டத்தைப் பொறுத்­த­வரை இரண்டு நகர்­வு­களில் கவ­ன­மாக இருக்­கின்­றது.

யாழ்ப்­பாண மாவட்­டத்தை பல­வீ­ன­மாக்கல், யாழ் பல்­க­லைக்­க­ழகம் தமிழ் அர­சி­யலின் முக்­கிய மைய­மாக இருப்­பதை தடுத்தல் என்­ப­னவே இந்த இரண்­டு­மாகும்.

யாழ்ப்­பாண மாவட்டம் விரும்­பியோ, விரும்­பா­மலோ தமிழ் அர­சி­யலின் மைய­மாக உள்­ளது. முக்­கி­ய­மான அர­சியல் தீர்­மா­னங்கள், முக்­கி­ய­மான போராட்­டங்கள் பற்­றிய தீர்­மா­னங்கள் யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்தே எடுக்­கப்­ப­டு­கின்­றன.

யாழ்ப்­பா­ணத்தைச் சேர்ந்­த­வர்கள் தற்­போது உலகம் முழுக்க பரந்து இருப்­ப­தனால் யாழ்ப்­பா­ணத்தில் இடம் பெறு­கின்ற ஒவ்­வொரு விட­யமும் உட­ன­டி­யா­கவே சர்­வ­தேச மட்­டத்தில் பேசு பொரு­ளாகி விடு­கின்­றது.

இம்­மா­வட்­டத்தில் 90 சத­வீ­தத்­திற்கு மேல் தமி­ழர்கள் வசிப்­பதும் மாவட்­டத்தை முக்­கிய நிலையில் வைத்­தி­ருக்­கின்­றது. மொத்­தத்தில் தமிழ்த்­தே­சிய அர­சி­யலின் குவி மையம் யாழ்ப்­பாணம் எனலாம்.

யாழ்ப்­பா­ணத்தின் இந்த முதன்மை நிலை அரசின் நிகழ்ச்சி நிரலை நகர்த்­து­வதில் தடங்­கல்­களை கொண்டு வரு­கின்­றது எனலாம்.

இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலை மட்­டு­மல்ல, இந்­திய அரசின் நிகழ்ச்சி நிரல், மேற்­கு­லகின் நிகழ்ச்சி நிரல் என்­ப­னவும் யாழ்ப்­பா­ணத்­திற்கு வரும் போது நகர முடி­யாமல் பல­வீ­ன­மாகி விடு­கின்­றது.

தமிழ் அர­சியல் தொடர்­பாக இந்­தியா நகர்த்­தி­யி­ருந்த அனைத்து நிகழ்ச்சி நிரல்­களும் தோல்­வி­யி­லேயே முடிந்­தி­ருக்­கின்­றன.

மேற்­கு­லகம் அரசு சாரா அமைப்­புக்கள் மூலம் நகர்த்த முயன்ற நிகழ்ச்சி நிரலும் தோல்­வி­யி­லேயே முடிந்­தி­ருக்­கின்­றது. யாழ்ப்­பா­ணத்தின் அதீத விழிப்பு நிலையே இதற்கு கார­ண­மாகும்.

யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழ­கத்தை சிங்­கள மய­மாக்­கு­வ­தற்கு அது எடுத்துக் கொண்ட கரு­வியே ஆங்­கில மொழி­வழி கற்கைத் துறை­யாகும். முன்னர் விஞ்­ஞான பீடம், மருத்­துவ பீடம் ஆகி­ய­னவே ஆங்­கில மொழி கற்கை துறை­க­ளாக இருந்­தன.

வணி­க­பீடம், முகா­மைத்­துவப் பீடம் என்­ப­வற்றில் தமிழ் மொழி கற்கை துறையே நடை­மு­றையில் இருந்­தது.

விரை­வி­லேயே முகா­மைத்­துவ பீடம் ஆங்­கில வழி கற்­கைக்கு மாற்­றப்­பட்­ட­தோ­டல்­லாமல் புதி­தாக உரு­வாக்­கப்­பட்ட சட்ட பீடமும் ஆங்­கில வழி கற்கை துறை­யாக மாறி­யது.

இவற்றை விட விவ­சாய பீடம், பொறி­யியல் பீடம் என்­ப­னவும் ஆங்­கில வழி கற்கை துறை­க­ளாக மாறின.

இங்கு ஆங்­கில வழி கற்கை துறை என்ற பெயரில் வகை தொகை இல்­லாமல் சிங்­கள மாண­வர்கள் கலைப்­பீடம், நுண்­க­லைப்­பீடம் அல்­லாத அனைத்து பீடங்­க­ளுக்கும் உள்­வாங்­கப்­பட்­டனர்.

இவ்­வாறு உள்­வாங்­கப்­படும் போது இது ஒரு பண்­பாட்­டுப்­பல்­க­லைக்­க­ழகம் என்ற விடயம் சிறிது கூட கவ­னத்தில் எடுக்­கப்­ப­ட­வில்லை.

ருகுணு பல்­க­லைக்­க­ழ­கத்தில் ஒரு பீடத்­தி­லா­வது தமிழ் மாண­வர்­களின் பெரும்­பான்­மையை அங்­கீ­க­ரிப்­பார்­களா? அங்கு ஒரு நியாயம், இங்கு ஒரு நியா­யமா?

பாட­சா­லை­களில் மாண­வர்­களை அனு­ம­திக்கும் போது கூட மதம் சார்ந்தும் இனம் சார்ந்தும் பண்­பாட்டு விட­யங்­க­ளுக்கே முக்­கி­யத்­துவம் கொடுக்­கப்­ப­டு­கின்­றது.

ஒரு கிறிஸ்­தவ மத பாட­சா­லையில் கிறிஸ்­தவ மாண­வர்­களின் பெரும்­பான்­மைக்கே முக்­கி­யத்­துவம் கொடுக்­கப்­ப­டு­கின்­றது. பௌத்த மத பாட­சா­லை­களில் பௌத்த மத மாண­வர்­க­ளுக்கே பெரும்­பான்மை வழங்­கப்­ப­டு­கின்­றது.

யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழ­கத்தில் கலைப்­பீடம் அல்­லாத அனைத்து பீடங்­க­ளிலும் சிங்­கள மாண­வர்­களே பெரும்­பான்­மை­யாக உள்­ளனர்.

இப்­பெ­ரும்­பான்மை கூட சிறிய பெரும்­பான்மை அல்ல. ¾ பெரும்­பான்மை அல்­லது மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை, 50 : 50 இருந்­தா­லா­வது ஒரு வகையில் ஏற்றுக் கொள்­ளலாம் ஆனால், அனே­க­மான பீடங்கள் 75 :25 என்ற வீதமே உள்­ளது.

சட்ட பீடத்தில் அது 80 :20 என்ற வகையில் உள்­ளது இது திட்­ட­மிட்ட ஒரு சிங்­கள மய­மாக்கல் செயற்­பாடே. இதனை எப்­ப­டி­யா­வது தடுத்து நிறுத்த வேண்­டிய பொறுப்பு தமிழ் மக்­க­ளுக்­குள்­ளது.

இதனை தடுத்து நிறுத்­தா­விட்டால் ஒரு பண்­பாட்டுப் பல்­க­லைக்­க­ழகம் என்ற தகை­மையை யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழ­கத்­தினால் பெற்­று­விட முடி­யாது. இது ஒரு­வ­கையில் இன அழிப்பே. பண்­பாட்டு மையங்­களை அழிப்­பதும் இன அழிப்பே ஆகும்.

தமிழ்த்­தே­சிய அர­சி­யலின் முக்­கிய மைய­மாக இருப்­பதை அழிப்­பதும் அதன் ஒரு இலக்­காகும்.

இதை விட சட்­டக்­கல்­வியை தமிழ் வழியில் யாழ்ப்­பா­ணத்தில் படிக்க விரும்பும் மாண­வர்கள் படிக்க முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது.

அவர்கள் தமிழ் மொழியில் படிக்க வேண்டும் என்றால் கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு தான் செல்ல வேண்டும்.

கொழும்பில் கற்­பது என்­பது ஏழைக்­கு­டும்­பத்தில் பிறந்த மாண­வர்­க­ளுக்கு இல­கு­வான ஒன்­றல்ல.

இதற்­கா­கவே சட்­டப்­ப­டிப்பை நிறுத்தி கலைப்­பீ­டத்­திற்கு சென்ற மாண­வர்­களும் உண்டு. தனது சொந்த பிர­தேச பல்­க­லைக்­க­ழ­கத்தில் சட்­டப்­பீடம் இருந்தும் தனது தாய் மொழியில் அங்கு கற்க முடி­யாமை தமிழ் மாண­வர்­களைப் பொறுத்த வரை துர­திஷ்­ட­வ­ச­மா­னதே.

ஒரு பண்­பாட்டு பல்­க­லைக்­க­ழ­கத்தில் தாய் மொழியில் கற்க முடி­யா­விட்டால் வேறு எங்கு கற்­பது என்ற கேள்­வியும் எழு­கின்­றது.

இதை விட இன்னொரு விடயம் தமிழ் மொழியில் கற்கும் போது உச்ச நிலையில் கற்கக் கூடிய வாய்ப்பு உண்டு.

விரி­வு­ரை­யா­ளர்­களும் உச்ச நிலையில் கற்­பிக்­கலாம். யாழ்ப்­பாணப் பல்­க­லைக்­க­ழக சட்ட பீடத் தலை­வ­ராக இருந்த குரு­பரன் ஒரு தடவை கூறினார் ‘தமிழில் கற்­பிப்­ப­தென்றால் உச்ச நிலையில் மாண­வர்­க­ளுக்கு கற்­பிக்க முடி­யும்.

ஆங்­கில மொழியில் கற்­பிக்கும் போது மாண­வர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்­ப­தற்­காக கீழி­றங்கி கற்­பிக்க வேண்­டிய நிலை உள்­ளது’

இங்கு தமிழ் வழிக்­கற்கை தொடர்­பாக இரண்டு எதிர்­க­ருத்­துக்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன.

ஒன்று தமிழ் வழியில் கற்று சட்­டத்­த­ர­ணி­க­ளா­ன­வர்கள் மொழி பற்­றாக்­குறை கார­ண­மாக உயர் நீதி­மன்றம், மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் என்­ப­வற்றில் தமது தொழிலை மேற்­கொள்ள முடி­யாத நிலையில் உள்­ளனர் என்ற கருத்­தாகும்.

இதில் உண்­மைகள் இல்லை என கூற முடி­யாது. இதற்கு மாற்று வழி சமாந்­த­ர­மாக ஆங்­கில மொழி தேர்ச்­சியை பெறு­வ­தற்­கான சூழலை உரு­வாக்­கு­வதே.

வெளி­நா­டு­களில் தொழில் பார்க்க முடி­யாத நிலையும் ஏற்­படும் என்ற வாதமும் இது தொடர்­பாக முன்­வைக்­கப்­ப­டு­கின்­றது.

முன்னர் தமிழ் வழியில் கற்ற பலர் இன்று சிறந்த சட்­டத்­த­ர­ணி­களாக உள்­ளனர் என்­பதை நாம் மறக்க முடி­யாது.

வெளி­நா­டு­க­ளிலும் சட்­டத்­த­ர­ணி­க­ளாக அவர்கள் பணி­பு­ரி­கின்­றனர். நுணுக்­க­மாக அவ­தா­னிப்பின் இது பல­வீ­ன­மான கருத்து என்றே கூறலாம்.

இரண்­டா­வது கருத்து சிங்­கள மொழி கற்­கையும் ஆரம்­பிக்­கும்­படி சிங்­கள மாண­வர்கள் கேட்பர் என்ற கருத்­தாகும்.

இது ஏற்­றுக்­கொள்ள கூடிய கருத்­தல்ல. சிங்­கள மொழியில் கற்­ப­தற்கு வேறு­பல பல்­க­லைக்­க­ழ­கங்கள் உள்­ளன. இங்கே ஆங்­கில வழி கற்­கையை நிறுத்தும் படி கேட்­க­வில்லை.

தமிழ் வழிக்­கற்­கைக்கும் சந்தர்ப்பம் கொடுங்கள் என்றே கேட்கப்படுகின்றது. எனவே சிங்கள மாணவர்கள் ஆங்கில வழியில் கற்க விரும்பினால் இங்கே கற்கலாம்.

சிங்கள மொழியில் கற்க விரும்பினால் சிங்கள பிரதேசங்களிலுள்ள பல்கலைக்கழகங்களில் கற்கலாம் என்ற நிலையை உருவாக்குவதே பொருத்தமானது.

இங்கே இந்த விவகாரத்தில் முக்கிய விடயங்கள் சிங்கள மயமாக்கல் செயற் பாட்டை தடுத்து நிறுத்துவது, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை ஒரு பண்பாட்டு பல்கலைக்கழகமாக பேணுவது என்பவையே ஆகும்.

இவற்றை மேற்கொள்வதற்கு எந்தவொரு பீடத்திற்கும் 60 வீதத்திற்கு மேல் தமிழ் மாணவர்கள் இருக்க வேண்டும் என்ற நிலைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இரண்டாவது சட்ட பீடம், முகாமைத்துவ பீடம் என்பவற்றில் தமிழ் வழிக்கற்கையும் ஆரம்பிக்க வேண்டும். இதன் வழி தமிழ் மொழியில் பயில விரும்பும் மாணவர்களுக்கு ஏற்ற வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

முதலில் இது தொடர்பான உரை யாடல்களை ஆரம்பிக்க வேண்டும். இதன் பின்னர் தமிழ் சமூகமாக இணைந்து அழுத்தங்களை கொடுப்பது பற்றி யோசிக்கலாம்.

Share.
Leave A Reply