நேற்று யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் வந்த இரவு நேர தபால் ரயில் கோண்டாவில் பகுதியைக் கடந்த போது இனந்தெரியாத குழுவொன்று கற்களை வீசித் தாக்கியுள்ளது.
பயணிகளின் புகார்களைத் தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்பு சேவை அதிகாரிகள் உடனடியாக சோதனை மேற்கொண்டனர், சந்தேக நபர்கள் ஏற்கனவே சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர் .
ஒரு பெட்டியில் உள்ள யன்னல் கண்ணாடிசேதமடைந்துள்ளது, ஆனால் பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
குறித்த சம்பவத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும், பொறுப்பான நபர்களை அடையாளம் காண முடியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.