இந்த வார விசாரணை நாளில் விஷ்ணு மீதான பஞ்சாயத்துதான் ‘ஹாட் டாப்பிக்’ ஆக இருக்கும் என்று தோன்றுகிறது. அர்ச்சனா மீது அப்படியொரு மென்ட்டல் டார்ச்சரை அவர் நிகழ்த்தியிருக்கிறார்.

விஷ்ணு + பூர்ணிமா கூட்டணியில் ஒரு தற்காலிகமான பிரிவு ஏற்பட்டிருக்கிறது. இதற்கான விதையைப் போட்டவர் அர்ச்சனா.

இன்னொரு பக்கம், நிக்சனை எப்படியாவது மாட்ட வைக்கலாமா என்று முயன்று தொடர்ந்து தோல்வியைத் தழுவுகிறார் மாயா. அர்ச்சனா மீது விஷ்ணு தொடுக்கும் வார்த்தைப் போர் எல்லை மீறி செல்கிறது.

மற்றவர்களும் இதை வேடிக்கை பார்ப்பது கொடுமையான செயல். கயிறு தண்டனையின் மூலம் சூட்சுமக் கயிறு பிக் பாஸிடம்தான் இருக்கிறது என்கிற அடிப்படையை போட்டியாளர்கள் புரிந்து கொண்டால் இந்த அளவிற்கு உணர்ச்சிவசப்பட மாட்டார்கள்.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவுமு்: Bigg Boss Tamil Season 7 30-11-2023 Vijay Tv Show- Day 60

…………………………………………………………………………………
Bigg Boss 7 Day 59: `பொளீர்… பொளீர்ன்னு அடிச்சு ஆடுவேன்!’ விஷ்ணுவின் சண்டை; வினோத ராஜா டாஸ்க்

‘யாராவது குறுக்கே பேசினால்…’ என்று ஆரம்பிக்க “குறுக்கெலும்பு உடைந்து விடும் என்று சொல்ல வருகிறீர்களா மன்னா?!” என்று ரைமிங்காக எடுத்துக் கொடுத்தார் விக்ரம்.

‘ஏன்தான் கேப்டன் ஆனோமோ’ என்று நொந்து போய் நூடுலஸ் ஆகுமளவிற்கு நிக்சனின் நிலைமை மோசமாக போகிறது. படுத்தறாய்ங்க… சர்வாதிகாரி ஒப்பனையில் கூட அவரால் கெத்து காட்ட முடியவில்லை.

விஷ்ணு சகஸ்ரநாம அர்ச்சனை போல விஷ்ணுவிற்கும் அர்ச்சனாவிற்கும் இடையில் நடக்கும் சண்டை சகிக்கவில்லை. கோபத்தில் விஷ்ணு விடும் வார்த்தைகளும் திமிரான உடல்மொழியும் மட்டரகமாக இருக்கிறது. விஷ்ணுவின் நடத்தை மாஸான வில்லனாக போல் இல்லை. தூசான ஒட்டடை போல் இருக்கிறது.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவுமு்: Bigg Boss Tamil Season 7 29-11-2023 Vijay Tv Show- Day 59

Share.
Leave A Reply