தனது 12 வயதுடைய மகளை 2 வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபர் ஒருவர் கொபேகனே பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை (01) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் வன்னிகம, வித்திகுளிய பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடையவர் ஆவார்.
குறித்த நபர் வவுனியா பம்பைமடு 17 ஆவது காலாட்படை முகாமில் ஊழியராக பணிபுரிபவர் என பொலிஸார் தெரிவித்தனர் .
குறித்த விடயம் தொடர்பில் கொழும்பு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு தகவல் கிடைத்ததையடுத்து இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கொபேகனே பொலிஸாருக்கு அறிவித்த நிலையில், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக நிக்கவரெட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் நிக்கவரெட்டிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.